உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்திற்கு மிரட்டல் இளைஞரிடம் விசாரணை

விமானத்திற்கு மிரட்டல் இளைஞரிடம் விசாரணை

கொச்சி, கேரளாவின் கொச்சியில் இருந்து லண்டன் நோக்கி செல்ல இருந்த, ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கேரளாவின் கொச்சியில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, ஏர் இந்தியா விமானம் நேற்று காலை 11:50 மணிக்கு புறப்பட இருந்தது. முன்னதாக, நேற்று அதிகாலை மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் கால் சென்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.அப்போது அவர், கேரளாவின் கொச்சியில் இருந்து லண்டன் நோக்கி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்தார்.இதையடுத்து, கொச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி, ஏர் இந்தியா நிறுவனம் உஷார்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் விமானம் முழுதும் சோதனை நடத்தினர். இதில், எந்தவிதமான மர்ம பொருளும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது.விமானம் புறப்பட போதிய அவகாசம் இருந்ததால், எவ்வித காலதாமதமுமின்றி திட்டமிட்டபடி நேற்று காலை 11:50 மணிக்கு லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் கொண்டட்டி பகுதியைச் சேர்ந்த சுஹைப், 29, என்பது தெரியவந்தது. இவர், தன் மனைவி மற்றும் மகளுடன் இதே விமானத்தில் புறப்பட, 'செக் இன்' செய்ய முற்பட்டபோது, விமான நிலைய பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிடிபட்ட அவரிடம், விமானத்திற்கு மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை