மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
4 hour(s) ago | 37
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
7 hour(s) ago | 5
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
9 hour(s) ago | 1
ஷில்லாங், பள்ளி மாணவர்கள் கூடுதலாக அறிவை வளர்க்கும் வகையில், அவர்களது பாடப்புத்தங்களில் க்யூ.ஆர்., கோடுகளை சேர்க்க மேகாலய அரசு முடிவு செய்துள்ளது.வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் பள்ளி பாடப்புத்தகங்களில் க்யூ.ஆர்., கோடு அறிமுகம் செய்யப்படுகிறது.மாணவர்கள் கூடுதல் அறிவை பெறும் வகையில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில கல்வித்துறை செயலர் மராக் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: குறிப்பிட்ட பாடங்களில் கூடுதல் அறிவை மாணவர்கள் பெறும் வகையில் க்யூ.ஆர்., கோடு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாணவர்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்பதுடன் தான் விரும்பும் பாடங்களில் கூடுதல் திறன்களை வளர்த்து கொள்ள முடியும். 'மொபைல் போன்'கள் உதவியால் இந்த க்யூ.ஆர்., கோடுகளை ஸ்கேன் செய்து, 'வீடியோ'க்களுடன் கூடிய பாடங்கள், விடைகளுடன் கூடிய வினாத்தாள்களையும் பெறலாம். இதன் வாயிலாக தேடுதல் நேரம் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
4 hour(s) ago | 37
7 hour(s) ago | 5
9 hour(s) ago | 1