வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குற்றம் செய்தவர்களுக்கு ஏதாவது கடன் தண்டனை இருக்கிறதா?? துறை ரீதியாக நடவடிக்கை அவ்வளவுதான். இதான் ஊழல்களும் குற்றங்களும் அதிகரிப்பதற்கு காரணம். ஆண்மையற்ற, முதுகெலும்புற்ற சட்டங்களால் தான் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது.
விஜயநகரா: ஹொஸ்பேட் ஏ.பி.எம்.சி., யார்டில் எடை இயந்திரத்தில் முறைகேடு செய்ததை பார்த்து உபலோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கர்நாடக உபலோக் ஆயுக்தா வீரப்பா, நேற்று காலையில், விஜயநகரா மாவட்டத்தின் ஹொஸ்பேட்டில் பல இடங்களை ஆய்வு செய்தார். பின், நகரின் 'ஏ.பி.எம்.சி.,' எனும் விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் சந்தைக்கு சென்றார்.ஏ.பி.எம்.சி., அலுவலகத்தில் உள்ள எடை இயந்திரத்தை பரிசோதித்தபோது, இரண்டு கிலோ எடை குறைவாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த எடை, இயந்திர பிரிவு அதிகாரி அம்ரிதா சவுகானிடமும்; ஏ.பி.எம்.சி., செயலர் சித்தையா சுவாமியிடமும், எடை முறைகேடு தொடர்பாக முழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.பின், யார்டை ஆய்வு செய்தபோது, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.'எங்களை தவறாக வழி நடத்துகிறீர்களா. பொருட்களின் தரம் குறித்து பரிசோதிப்பதில்லை. தங்கள் விளைச்சல்களை கொண்டு வரும் விவசாயிகள் ஓய்வு அறையை, போலீஸ் நிலையத்துக்கு வாடகைக்கு கொடுத்துள்ளீர்கள். விவசாயிகள் வேறு எங்கு ஓய்வெடுப்பர். இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்.பின், துங்கபத்ரா கால்வாயை பார்வையிட்டார். தண்ணீர் மாசு அடைந்திருப்பதை பார்த்து கோபம் அடைந்தார். இது தொடர்பாக நகராட்சி, சுற்றுச்சூழல் துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யும்படி அவர் உத்தரவிட்டார்.
குற்றம் செய்தவர்களுக்கு ஏதாவது கடன் தண்டனை இருக்கிறதா?? துறை ரீதியாக நடவடிக்கை அவ்வளவுதான். இதான் ஊழல்களும் குற்றங்களும் அதிகரிப்பதற்கு காரணம். ஆண்மையற்ற, முதுகெலும்புற்ற சட்டங்களால் தான் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது.