| ADDED : ஜூலை 22, 2024 06:24 AM
பீதர்: ''நான் ஆரம்பத்தில் இருந்தே, முதல்வர் சித்தராமையாவின் ரசிகன். இவரது செயலை பார்த்தால், இதற்கு முன்பிருந்த சித்தராமையாவா என்ற சந்தேகம் எழுகிறது,'' என, மாநில பா.ஜ., துணை தலைவர் ராஜுகவுடா தெரிவித்தார்.பீதரில் நேற்று அவர் அளித்த பேட்டி:வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் 87 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். சட்டசபைக்குள் நீண்ட நேரம் பேசிய முதல்வர், ஊடகத்தினர் சந்திப்பில், பா.ஜ., அரசில் நடந்த ஊழல்களை பற்றி பேசியுள்ளார்.எங்கள் அரசில் ஊழல் நடந்தது உண்மை என்றால், இப்போது, அவரது அரசு தான் உள்ளது. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும். அதை விட்டு விட்டு 'பிளாக்மெயில்' செய்து மிரட்டுகிறார்.எங்கள் அரசு இருந்த போது, 40 சதவீத கமிஷன் அரசு என, குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இப்போது இவர்கள் 'ஒயிட்'டில் கமிஷன் பெறுகின்றனர். மாவட்ட, தாலுகா அளவில் ஒவ்வொரு துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பணம் இல்லாமல் எந்த வேலைகளும் நடக்காது. இந்த அரசு, அதிக நாட்கள் நிலைக்காது என தோன்றுகிறது.நான் ஆரம்பத்தில் இருந்தே, முதல்வர் சித்தராமையாவின் ரசிகன். இவரது செயலை பார்த்தால், இவர் இதற்கு முன்பிருந்த சித்தராமையா தானா என்ற சந்தேகம் எழுகிறதுஇவ்வாறு அவர் கூறினார்.