உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., கூட்டணியில் குமாரசாமிக்கு ஜாக்பாட் முதல்வர், மத்திய அமைச்சர் பதவியால் செல்வாக்கு

பா.ஜ., கூட்டணியில் குமாரசாமிக்கு ஜாக்பாட் முதல்வர், மத்திய அமைச்சர் பதவியால் செல்வாக்கு

இரண்டு முறை ஆதாயம் அடைந்த பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி. ஒருமுறை முதல்வராகவும், ஒருமுறை மத்திய அமைச்சராகவும் குமாரசாமி பதவி வகித்துள்ளார்.கர்நாடகாவில் 1999 ல் ஜனதா தளம் இரண்டாக உடைந்து, ஜே.எச்.பட்டேல் தலைமையில் 'சம்யுக்த ஜனதா தளம்' என்றும்; தேவகவுடா தலைமையில் 'மதசார்பற்ற ஜனதா தளம்' என்றும் உருவானது.மதசார்பற்ற ஜனதா தளம் உருவாகி ஐந்து ஆண்டுகளில், 2004 ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் காங்கிரஸ், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்தது. அப்போது, முதன் முறையாக குமாரசாமி எம்.எல்.ஏ.,வாகி சட்டசபைக்குள் நுைழந்தார். காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார்.இதன் பின்னர் நடந்த தேர்தல் முடிவுக்கு பின்னர், பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் தலா 20 மாதம் ஆட்சி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டனர். முதன் முறையாக 2006 பிப்ரவரி 3 ல் முதல்வராக குமாரசாமி பதவி ஏற்றார். 20 மாதங்களுக்கு பின், ஒப்பந்தப்படி ஆட்சியை வழங்க அவர் சம்மதிக்காததால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மாண்டியாவில் குமாரசாமி, கோலாரில் மல்லேஸ்பாபு என இருவர், ம.ஜ.த.,வில் வெற்றி பெற்றனர்.நேற்று டில்லியில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், குமாரசாமிக்கு 'கேபினட்' அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.பா.ஜ., - ம.ஜ.த., முதல் கூட்டணியால் குமாரசாமி முதல்வராகவும், இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்ததில், மத்திய அமைச்சராகவும் குமாரசாமி பதவி ஏற்றுள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை