உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - எம்.எல்.ஏ.,வின் சிறை தண்டனை ரத்து 

பா.ஜ., - எம்.எல்.ஏ.,வின் சிறை தண்டனை ரத்து 

பெங்களூரு: வேட்புமனுவில் கிரிமினல் வழக்கு இருப்பதை குறிப்பிடாததால், பா.ஜ., - எம்.எல்.ஏ., உதய் கருடாச்சாருக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.பெங்களூரு சிக்பேட் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., உதய் கருடாச்சார், 64. கடந்த 2018 சட்டசபை தேர்தலின்போது, உதய் கருடாச்சார் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீது உள்ள கிரிமினல் வழக்கை குறிப்பிடவில்லை.மனைவியின் சொத்து விபரங்களையும் மறைத்ததாக, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் பிரசாந்த் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2022ல் உதய் கருடாச்சாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சிட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில், உதய் கருடாச்சார் மேல்முறையீடு செய்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவை, செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது.இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில், உதய் கருடாச்சார் மேல்முறையீடு செய்தார். நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் விசாரித்தார்.நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் முடிவில் நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் அளித்த தீர்ப்பு:மனுதாரர் மீது கிரிமினல் வழக்குப் பதிவாகி உள்ளது. ஆனால் அவரிடம் விசாரணை நடக்கவில்லை. கிரிமினல் வழக்கில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, வேட்புமனுவில் கிரிமினல் வழக்கை இருப்பதை மறைத்துவிட்டார் என்று கூறி, கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்து இருப்பது சரியல்ல.இதனால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் அபராதம் செலுத்தி இருந்தால், அபராத தொகையை அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்