உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

புதுடில்லி, டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, ஹைதராபாத் தொழிலதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகினார்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மாநில அரசின் மதுபான கொள்கையில், 2021 - 22ல் திருத்தம் செய்யப்பட்டது. இதில் மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., விசாரித்து வருகின்றன.முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக் போயின்பள்ளி கைது செய்யப்பட்டார்.சிறையில், 18 மாதங்களுக்கு மேல் இருந்ததால், கடந்த மார்ச் மாதம் அவருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பண மோசடி வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அபிஷேக் போயின்பள்ளி தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு, நீதிபதிகள், சஞ்சிவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வருவதாக இருந்தது.ஆனால், வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி சஞ்சிவ் குமார் விலகினார். இதையடுத்து, புதிய அமர்வில், வரும் 5ம் தேதிக்குப் பின் விசாரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மறு உத்தரவு வரும்வரை, ஜாமின் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி விலகியதற்கானகாரணம் தெரிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.Varadarajan
ஜூலை 17, 2024 19:55

இன்றைய நிலையில் நீதித்துறை எந்த ஊழல்வாதியையும் தண்டிக்கப்போவதில்லை . மாறாக அவர்கள் முதல்வராகவும் அமைச்சர்களாகவும் மறுவாழ்வு பெறவே உதவுவதாக ஒரு உணர்வை ஏற்படுத்துகிரது . கேஜ்ரிவால், ஹேமந்த்சோரன், பொன்முடி போன்றவர்கள் பதவியை திரும்பப்பெற்றதே இதற்கு சான்று. .


அப்பாவி
ஜூலை 17, 2024 09:39

அப்போ வழக்கு அம்போதான். வாழ்க நீதிமன்றம். வெல்க நீதி. சுபம்.


duruvasar
ஜூலை 17, 2024 09:34

இந்த நீதியரசர் ஜாமீன் வழங்குவதில் முதன்மை நிலையில் இருப்பவர்.


Kasimani Baskaran
ஜூலை 17, 2024 05:19

விஞ்ஞானத்துக்கே டப் கொடுக்கும் வாளரை தண்டிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை நீதித்துறை கூட புரிந்துவிட்டது போல தெரிகிறது. நீருக்கடியில் சென்று வேலை செய்தால் கேஸ் கண்டிப்பாக தரை மட்டத்துக்கு வந்துதான் ஆகவேண்டும் என்பது மெத்தப்படித்த மேதாவிகளுக்குக்கூட புரியவில்லை என்பது துரதிஸ்டவசமானது.


Palanisamy Sekar
ஜூலை 17, 2024 03:59

நீதிபதிகளின் செயல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இது குற்றம் சுமத்தப்பட்டவரின் செயலுக்கு உடந்தையாக இருக்கப்போகிறது. காரணத்தை சொல்லிவிட்டு வெளியேறலாம். பயம் காரணமாக இருக்குமோ என்றெல்லாம் சிந்திக்க தோன்றுகின்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஏன் எதற்க்காக விலகினார் என்று விசாரிக்கவும் வேண்டும். மிரட்டலா அல்லது நிர்பந்தமா என்று நாட்டுமக்களுக்கு தெரியவிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ