உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ. 1.74 லட்சம் கோடி

ஜூன் மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ. 1.74 லட்சம் கோடி

புதுடில்லி: ஜூன் மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ. 1.74 லட்சம் கோடியாக இருந்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2017ம் ஆண்டு ஜூலை முதல் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை, ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. காலம் காலமாக மாநில அரசுகளும், மத்திய அரசும் தனித்தனியாக வசூலித்து வந்த மறைமுக வரியானது, ஜி.எஸ்.டி., வாயிலாக ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, உள்நாட்டில் விற்பனை அதிகரித்த காரணத்தால், கடந்த மே மாத ஜி.எஸ்.டி., வசூல், 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1.73 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 7.7 சதவீதத்துடன் ரூ. 1.74 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சி.ஜி.எஸ்.டி., ரூ. 39,586 கோடியாகவும், எஸ்.ஜி.எஸ்.டி. ரூ. 33,548 கோடியாகவும் உள்ளது.இவ்வாறு தெரிவித்துள்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 02, 2024 10:15

வசூல் பண்ணி என்ன பன்றது? மக்களின் பயனுக்கு இல்லையே.


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2024 03:58

இந்தியாவின் பொருளாதாரம் மோடியின் ஆட்சியில் சக்கைபோடு போடுகிறது. அடுத்த வருடம் ஜிஎஸ்டி வரிவசூல் மாதம் நாலு லட்சம் கோடியாக மாறும். மக்களிடம் ஏராளமாக பணம் புழங்குகிறது என்று தெளிவாக விளங்குகிறது. பெட்ரோல் டீசல் வரியை ஏற்றவேண்டிய தருணம் வந்துவிட்டது. தேர்தலுக்காகத் தான் முன்பு குறைக்கப்பட்டது. இப்போது செலவாணி அதிகமாக இருப்பதால், ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ