உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 44 நாட்களில் வெறும் 6 முறை தான்; ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்கும் மனைவி... ஷாக்கான போலீஸ்

44 நாட்களில் வெறும் 6 முறை தான்; ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்கும் மனைவி... ஷாக்கான போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் திருமணமான வெறும் 44 நாட்களில் விவாகரத்து கேட்டு வந்த பெண்ணின் புகாரை கேட்டு போலீசார் திகைத்து போயினர். ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனின் செயலால் அதிருப்தியடைந்து, போலீஸில் கணவன் தன்னை வரதட்சணை சித்ரவதை அளிப்பதாகவும், அதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார். அப்போது, சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் விவாகரத்துக்கு காரணம் வரதட்சணை கொடுமையல்ல.. அதை விடவும் பெரிய கொடுமையான விஷயம் என தெரிய வந்துள்ளது.தனது கணவன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதாகவும், தினமும் குளித்து சுத்தமாக இருக்குமாறு கூறினால், அதனை ஏற்க மறுப்பதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வாரம் ஒருமுறை கங்கை நதியில் ஓடும் நீரை எடுத்து உடலில் தெளித்து விட்டு, தூய்மையடைந்து விட்டதாகவும், திருமணமான 44 நாட்களில் வெறும் 6 முறைதான் அவர் குளித்து இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியை குடும்ப நல ஆலோசனை மையத்தில் ஒரு வாரம் கவுன்சிலிங் பெற போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

shakti
செப் 19, 2024 14:33

நவீன பெரியார் போல ...


Sivak
செப் 16, 2024 20:17

காமெடியாக கருத்து போட்டவர்கள் ஒன்றை கவனிக்க வில்லை ... வரதட்சிணை கொடுமை பொய் புகார்... ஆண்கள் மேல் இப்படி தான் தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறார்கள் ... அவரவர் குடும்பத்தில் நடந்தால் தான் தெரியும், புரியும் இந்த தாக்குதலின் வீரியம் ...


தாமரை மலர்கிறது
செப் 16, 2024 20:15

காலையில் எழுந்தவுடன் தினமும் குளிப்பது அவசியம். குளிக்காதவர்களுடன் வாழ்வது கடினம்.


R K Raman
செப் 16, 2024 17:15

விவகாரமான தலைப்பு குறும்புத்தனம் மிகவும் அதிகமாக உள்ளது


Karthik M
செப் 16, 2024 16:32

"44 நாட்களில் வெறும் 6 முறை தான் ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்கும் மனைவி... ஷாக்கான போலீஸ்" - வெறும் ஆறு முறை தான் தினமலர் வாசகரை எப்படி இருக்கிறது பாரும் செய்தியை படிக்க


Kundalakesi
செப் 16, 2024 16:01

ஒன்றாக குளிக்க முயலுங்கள். வாழ்த்துக்கள்


Ramesh Sundram
செப் 16, 2024 14:10

ayya தமிழ்நாட்டிற்கு வந்து விடாதீர்கள்


Balasubramanian
செப் 16, 2024 14:00

கல்யாணம் ஆகி நாப்பது நாட்களில் பெண் குளிக்காமல் போனதாக சொல்ல கேள்வி பட்டிருக்கிறோம்! இது என்ன ஆண் குளிக்கவில்லை என்று? ஹி ஹி !


ஆரூர் ரங்
செப் 16, 2024 13:08

.... குளிக்க மாட்டாராம். ஆனாலும் அவரருகே ஒரு கூட்டம் இருந்தது.


Albert Alexender
செப் 16, 2024 13:01

கங்கை நீரை தெளிக்கும் போது கங்கையில் தள்ளிவிட்டலயா


சமீபத்திய செய்தி