உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: கவர்னருக்கு எதிராக கண்டன தீர்மானம்

கர்நாடக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: கவர்னருக்கு எதிராக கண்டன தீர்மானம்

பெங்களூரு : 'மூடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து, கர்நாடக அமைச்சரவை கூட்டத்திலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.இதில், முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகார்கள் குறித்து, முதல்வரிடம் விளக்கம் கேட்டு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும், கவர்னர் அனுமதி அளித்தார்.

அதிகாரம் உள்ளது

இதை எதிர்த்து, முதல்வர் தாக்கல் செய்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில், முதல்வர் பங்கேற்கவில்லை. முதல்வரின் உத்தரவின்படி, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடந்தது.

அதன்பின், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:

ஏற்கனவே முதல்வருக்கு கவர்னர் அளித்த நோட்டீசை திரும்ப பெறும்படி, ஆக., 1ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசியல் அமைப்பு சட்டம் 163வது பிரிவின் படி, கவர்னருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது.இதன்படி, மத்திய அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., முன்னாள் அமைச்சர்கள் சசிகலா ஜொல்லே, முருகேஷ் நிரானி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான முறைகேடு வழக்குகளில் விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கவர்னருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையில், விதான் சவுதாவில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின், துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:

பறிப்பதற்கு சூழ்ச்சி

முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னரின் செயலை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், முதல்வருக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.கர்நாடக மக்கள், 136 எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெற செய்து, காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளனர். ஆனால், பா.ஜ., - ம.ஜ.த., கட்சி தலைவர்கள், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரின் பதவியை பறிப்பதற்கு சூழ்ச்சி நடக்கிறது. இந்த மிரட்டலுக்கு பணிய மாட்டோம். ஜனநாயகத்தை காப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இன்று டில்லி பயணம்

கர்நாடகாவில் நடந்து வரும் அரசியல் சூழல்கள் குறித்து, காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு விளக்குவதற்காக, முதல்வரும், துணை முதல்வரும், சிறப்பு விமானம் மூலம், இன்று காலை 11:00 மணிக்கு டில்லி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2024 10:47

தவறு செய்ததை நியாயப்படுத்துவது காங்கிரசின் மரபா ? இந்த கேள்விக்கு பொதுமக்களிடம் கேள்வி கேட்கப்படவேண்டும்


VENKATASUBRAMANIAN
ஆக 23, 2024 08:17

இவர்கள் யாரும் முதல்வர் தவறே செய்யவில்லை என்று கூறவில்லை. ஆளுநர் விசாரிக்க உத்தரவு கொடுத்தது பற்றி மட்டுமே கவலை. இதுதான் காங்கிரஸ்


Palanisamy Sekar
ஆக 23, 2024 05:56

காங்கிரசின் அரசியல் கலாச்சரத்தின் லட்சணம் இதுதான். எந்த காலத்திலும் காங்கிரஸ் ஊழலை விட்டு வெளியே வராது. கொள்ளையடிப்பதில் தயக்கமே காட்டியதில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் அந்த மாநிலத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதனை விடுத்து ஊழல் புகாரை விசாரிக்க அனுமதித்த ஆளுநர் மீது பாய்வது இவர்களின் கொள்ளைக்கு ஆளுநர் துணைபோக சொல்வதுபோல உள்ளது. மக்கள் இதுபோன்ற நபர்களை தேர்தலில் வெற்றிபெற செய்வது தங்கள் தலையில் தாங்களே மண்ணையள்ளி போடுவதுபோல ஆகிவிட்டது. இப்படி தீர்மானம் போடுவதை காங்கிரசின் மேலிடம் எப்படி அனுமதித்தது? அப்போ இந்த ராகுல் காந்தியின் யோக்கியதை பல்லிளிக்கின்றதோ ? கேவலமான தீர்மானம். சட்டப்படி உயர்நீதிமன்றம் சித்தராமையாவை பதவி நீக்கம் செய்துவிட்டு அவரது மனைவிக்கு கொடுத்த பதினான்கு வீட்டுமனை மீதான விசாரணையை உடனே துவங்க ஏற்பாடு செய்திட வேண்டுமே தீவிர வழக்கினை ஒத்திவைத்து சரியல்ல. ஆளுநர் மிக சரியாக செயல்பட்டுள்ளார். இதேபோல இங்கே தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் ஆளுநரிடம் சமர்ப்பித்த திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது பற்றிய விசாரணைக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும். கடமையை சரியாக செய்த கர்நாடக ஆளுநர் பாராட்டுக்கு உரியவர். கண்டன தீர்மானம் போட்ட காங்கிரசின் செயல் நாட்டுக்கே அவமானம்.


RAAJA 68
ஆக 23, 2024 05:48

Meeting by thieves against Police.


Kasimani Baskaran
ஆக 23, 2024 05:29

முதல்வர் என்றால் சட்டத்தில் விதிவிலக்கெல்லாம் கிடையாது. ஆனாலும் இதுகள் ஓவராகத்தான் ஆடுதுகள்...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ