கலாசிபாளையம்:கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சார்பில் நடந்த காமராஜர் 122 வது பிறந்த நாள் விழாவில், தமிழ் சங்க காமராஜர் பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச பள்ளி பேக் வழங்கப்பட்டது.கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சார்பில் கலாசிபாளையத்தில் உள்ள சங்க கட்டடத்தில், நேற்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்துமதி சந்திரசேகரன் இறை வணக்கம் பாடினார். சங்கத்தில் உள்ள பெண்கள் குத்து விளக்கேற்றினர். சங்க நிர்வாகிகள்
காமராஜர் படத்துக்கு சிறப்பு விருந்தினர்கள், சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். சங்க தலைவர் தியாகராஜன் வரவேற்றார். செயலர் கிருஷ்ணவேணி பேசினார். பொருளாளர் ஜவஹர், காமராஜர் பற்றியும், சங்கம் தொடர்பாகவும், சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா குறித்து விளக்கினார். துணைத் தலைவர் குருசாமி, துணைச் செயலர்கள் சசிகாந்த், விஜயா ராம்குமார், சீனிவாசகம், பிரபு ராஜாமணி உட்பட பலர் பேசினர்.எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு, மூன்று பேருக்கு தலா 10,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.பெங்களூரு தமிழ் சங்க காமராஜர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தலைமையில் வந்திருந்த 10 மாணவ - மாணவியருக்கு, பள்ளி பேக் வழங்கப்பட்டது. எல்.கே.ஜி., மாணவி
ஆறாம் வகுப்பு மாணவி சஸ்டிகாவின் பரதநாட்டியம் இடம் பெற்றது. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் உட்பட பல திட்டங்கள் குறித்து எல்.கே.ஜி., மாணவி அனிசா பேசியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் செயலர் ராமசுப்பிரமணியன், கர்நாடகா தேவர் சங்க துணைத் தலைவர் கனகராஜ், விஸ்வகர்மா சங்கத் தலைவர் முத்துராமன், செயலர் தங்கம், திரவுபதி அம்மன் கோவில் டிரஸ்டி ஸ்ரீதர் சுவாமிகள் பங்கேற்றனர். நிர்வாகி சுரேஷ் குமார் நன்றி கூறினார்.கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், பெங்களூரு தமிழ்ச் சங்க காமராஜர் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி பேக் வழங்கப்பட்டது. உடன், அசோசியேஷன் நிர்வாகிகள். இடம்: கலாசிபாளையம், பெங்களூரு.