உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான கொள்கை வகுக்கும் நேரத்தில் கெஜ்ரிவால் போன் மிஸ்சிங்: விசாரணையில் தகவல்

மதுபான கொள்கை வகுக்கும் நேரத்தில் கெஜ்ரிவால் போன் மிஸ்சிங்: விசாரணையில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை வகுக்கும் நேரத்தில் கெஜ்ரிவால் போன் மிஸ்சிங் ஆனதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மதுபான கொள்கை வகுக்கப்பட்டது.கலால் கொள்கை தொடர்பாக பண மோசடி செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கட்சியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் இது தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளான கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வரும் 28 ம் தேதி வரையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவும் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் கெஜ்ரிவாலிடம் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்போது மதுபானக் கொள்கை வகுக்கும் போது கெஜ்ரிவால் பயன்படுத்திய போன் குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது அவர் போன் மிஸ்சிங் ஆனதாகவும், அந்த போன் தற்போது எங்குள்ளது என்று தெரியவில்லை என கெஜ்ரிவால் அதிகாரிகளிடம் பதிலாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்