மேலும் செய்திகள்
2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு
1 hour(s) ago | 3
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
2 hour(s) ago | 4
ஹாசன்: ஹாசன் மாவட்ட கலெக்டர் சத்தியபாமா, கெம்பேகவுடா நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்தது.ஹாசன் நகரின் ஹாசனாம்பா கலாஷேத்ராவில் கெம்பேகவுடா ஜெயந்தி நேற்று நடந்தது. கலெக்டர் சத்யபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், எழுத்தாளர் குருராஜ் பேசியதாவது:கெம்பேகவுடா பெங்களூரில் கோட்டை கட்டும் போது, தெற்கு வாசல் இடிந்து விழுந்தது. தினமும் பகலில் கட்டினால், இரவோடு இரவாக இடியும், பலமுறை கட்டியும் நிற்கவில்லை. இதே வருத்தத்தில் இருந்த அவர் புரோஹிதரை வரவழைத்து கேட்ட போது, கர்ப்பிணியை நரபலி கொடுத்தால், கோட்டை வாசல் நிற்கும் என ஆலோசனை கூறுகிறார்.ஆனால், நரபலி குறிப்பாக, கர்ப்பிணியை பலி கொடுப்பதில், கெம்பேகவுடாவுக்கு விருப்பம் இல்லாததால், அவர் மவுனமாக இருந்து விட்டார். தன் மாமனாரின் ஆசையை நிறைவேற்ற, மருமகள் லட்சுமி தேவி முடிவு செய்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கூர்மையான வாளுடன், நள்ளிரவு 12:00 மணிக்கு அரண்மனையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் கோட்டையை நோக்கி சென்றார். அங்கு தன்னை தானே வெட்டி, பலி கொடுத்து கொண்டார். அப்போது கோட்டை வாசல் இடியாமல் நின்றது. இது வரலாறாகும்.மறுநாள் அதிகாலை கோட்டை வாசலுக்கு, கெம்பேகவுடா சென்ற போது, அங்கு தென்பட்ட காட்சியை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். தன் உயிரை தியாகம் செய்த மருமகளுக்கு, ஒரு கோவிலும் கட்டினார். அந்த கோவில் இன்றைக்கும் கோரமங்களாவில் உள்ளது. இந்த விபரங்கள் சாசனங்களில் குறிப்பிட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.உயிரை தியாகம் செய்த, கெம்பேகவுடாவின் மருமகள் லட்சுமி தேவியின் வரலாற்றை கேட்ட, கலெக்டர் சத்யபாமா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார்.
1 hour(s) ago | 3
2 hour(s) ago | 4