உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட்டில் கோலார் திட்டங்கள் புறக்கணிப்பு; தே.ஜ., கூட்டணி எம்.பி., இருந்தும் பயனில்லை

பட்ஜெட்டில் கோலார் திட்டங்கள் புறக்கணிப்பு; தே.ஜ., கூட்டணி எம்.பி., இருந்தும் பயனில்லை

கோலார் : லோக்சபா தேர்தலுக்கு பின், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், கோலார் மாவட்டத்திற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததால், மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.கோலார் நகரில் இருந்து பெங்களூருக்கு சரியான ரயில் வசதி இல்லை. முன்னதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் காகிதத்தில் மட்டுமே உள்ளது. கூடுதல் ரயில் போக்குவரத்துக்கு கோரிக்கை இருந்தாலும் பட்ஜெட்டில் காணப்படவில்லை.தற்போது, சிந்தாமணி வழியாக பெங்களூருக்கு இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சிக்கபல்லாப்பூருக்கு இயக்கப்படும் கூடுதல் ரயில்களை கோலார் வரை நீடித்து, பெங்களூரு- - கோலார் இடையே நேரடி ரயில் பாதை அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தக்காளி, மாம்பழம், கொண்டு செல்ல வாகன வசதி தேவை. கோலாரிலிருந்து சீனிவாசப்பூருக்கு தக்காளி, காய்கறி, பூ, மாம்பழம் கொண்டு செல்ல முறையான இணைப்பு வாகன வசதி இல்லை.கோலார் -- ஒயிட் பீல்டு வழியாக பெங்களூருக்கு புதிய ரயில் பாதை; சயனைட் மண்ணில் தங்கம் எடுக்கும் திட்டம் பற்றி கூறப்படவில்லை; தங்கச் சுரங்க பகுதியில் மிகப் பெரிய தொழில் துறை மண்டலம் உருவாக்கும் திட்டம் குறிப்பிடப்படவில்லை. சீனிவாசப்பூர் தாலுகாவில் ரயில்வே ஒர்க் ஷாப் அமைத்தல்; கோலார்- - பெங்களூரு இடையே நேரடி ரயில் பாதை திட்டம்; கிருஷ்ணா நதி - பெண்ணாறு நதி இணைப்பு, பெரிய தொழில் திட்டம், விவசாய பொருட்கள் பதப்படுத்தும் பூங்கா உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் கோலார் மாவட்டத்திற்கு அறிவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதுவும் அறிவிக்கப்படாததால், ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.'தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.ஜ.த., கோலாரில் வெற்றி பெற்ற போதிலும், பாராமுகமாக இருந்து விட்டனரே' என பலரும் அங்கலாய்க்கின்றனர்.நல்ல பட்ஜெட்ஒட்டுமொத்தமாக இது நல்ல பட்ஜெட். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாடே ஏற்றுக் கொள்ளத்தக்க அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.மல்லேஸ்பாபு,எம்.பி., - ம.ஜ.த., கோலார்பாரபட்சம்ஆந்திரா, பீஹாருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவுக்கு பாரபட்சம் காட்டியுள்ளது. பா.ஜ.,வுக்கு அதிக எம்.பி.,க்கள் இருந்தாலும் எந்த திட்டத்தையும் கொடுக்கவில்லை. இது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.- நஞ்சேகவுடா, எம்.எல்.ஏ., - காங்., மாலூர்கர்நாடகாவுக்கு அநீதி கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவை புறக்கணித்தது வருத்தம் அளிக்கிறது. கோலார் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.-அனில் குமார், எம்.எல்.சி., - காங்.,தரகர்கள் தவிர்ப்புஇளைஞர்களுக்கான முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 20 லட்சம் ரூபாய், வேலை தேடுவோருக்கு மாதம் 5,000 ரூபாய், சந்தையில் இடைத்தரகர்களின் அச்சுறுத்தலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.-- சம்ருத்தி மஞ்சுநாத், எம்.எல்.ஏ., - ம.ஜ.த., முல்பாகல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை