மேலும் செய்திகள்
வங்கதேச தூதருக்கு மத்திய அரசு மீண்டும் சம்மன்
1 hour(s) ago | 1
பிரசவ இறப்பு விகிதம் குறைந்தது: மத்திய அரசு அறிவிப்பு
3 hour(s) ago
பெங்களூரு: “பா.ஜ.,வுடன் அமைத்துள்ள கூட்டம் தற்காலிகமானது அல்ல. லோக்சபா தேர்தலுக்கு பின்னரும் தொடரும்,” என, முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கர்நாடகாவின் செல்வாக்குமிக்க ஒரே மாநில கட்சியான ம.ஜ.த., கடந்தாண்டு இறுதியில் இணைந்தது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., - 25 தொகுதிகளிலும், ம.ஜ.த., - 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.கூட்டணிக்குப் பின், பா.ஜ., - ம.ஜ.த.,வின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் முதன்முறையாக பெங்களூரில் நேற்று நடந்தது. பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா, மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக்; ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட இரண்டு கட்சிகளின் ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது: உடம்பில் தெம்பு
முன்னாள் பிரதமர் தேவகவுடா: காங்கிரசுக்கு பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது.தேர்தல் பிரசாரம் செய்யும் அளவுக்கு எனக்கு இன்னும் உடம்பில் தெம்பு உள்ளது. பெங்., ரூரல் லோக்சபா தொகுதி பொறுப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கை நியமியுங்கள். சாதாரண தொண்டர் போல், அனைவரும் வெற்றிக்காக போராடுவோம்.பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு, ம.ஜ.த.,வினர் பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். கர்நாடக காங்கிரஸ் தற்போது வளமாக உள்ளது. இங்குள்ள வளத்தை, முறைகேடாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறது.கர்நாடகாவிலும் பணமழை பொழிவார்கள். அவர்களை தோற்கடிப்பது சுலபமான வேலை அல்ல. இரண்டு கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி, 28க்கு, 28 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா: மாநில அரசின் கருவூலம் காலியாகிவிட்டதால், எந்த வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்துள்ளது. பிரதமர் கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு மத்திய அரசு 6,000 ரூபாயும், நான் முதல்வராக இருந்தபோது கூடுதலாக மாநில அரசு சார்பில் 4,000 ரூபாயும் வழங்கி வந்தோம்.காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மாநில அரசின் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது. அரசு திவாலாகிவிட்டது என்று கூறுவதற்கு, இதை விட வேறு உதாரணம் தேவையா?பா.ஜ., வேறு ம.ஜ.த., வேறு அல்ல. நாம் அனைவரும் ஒரு தாய் குழந்தைகள். இரண்டு கட்சிகளின் எந்த வேட்பாளராக இருந்தாலும், வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது தான், நாம் இலக்கை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், பிரதமர் நரேந்திர மோடி உழைத்துக் கொண்டே இருக்கிறார். 'இந்த வயதிலும் மாநிலம் முழுதும் பிரசாரம் செய்வேன்' என, தேவகவுடா கூறியுள்ளார். காங்கிரசுக்கு பயம்
முன்னாள் முதல்வர் குமாரசாமி: பா.ஜ.,வுடன் அமைத்துள்ள கூட்டணி தற்காலிகமானது அல்ல. லோக்சபா தேர்தலுக்கு பின்னரும் தொடரும். கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், காங்கிரஸ் வெற்றி பெற முடியாது.சூரியன், சந்திரன் உதிப்பது எப்படி உண்மையோ, மோடி மீண்டும் பிரதமர் ஆவதும் உண்மை தான். பூத் மட்டத்தில் இருந்து, மாநில நிர்வாகிகள் வரை அனைவரும் பணியாற்ற வேண்டும்.கூட்டணி அமைந்த நாளிலேயே, காங்கிரசுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக கூட்டணி அமைத்துள்ளோம். மாபெரும் வெற்றி
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா: கர்நாடக அரசியல் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், பொன் எழுத்துக்களால் எழுதும் மாபெரும் வெற்றியை, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி ஏற்படுத்தும். பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் நம் மீது உள்ளது.பா.ஜ., தொண்டர்கள், இரண்டு கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். பிரதமரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். நானும், குமாரசாமியும் இணைந்து மைசூரு, குடகு, மாண்டியாவில் பிரசாரம் செய்துள்ளோம்.
1 hour(s) ago | 1
3 hour(s) ago