உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  குமாரசாமி

2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  குமாரசாமி

மாண்டியா: ''மாண்டியா லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்,'' என, ம.ஜ.த., முன்னாள் எம்.பி., புட்டராஜு தெரிவித்தார்.மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாண்டியாவில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வாக்காளர்கள் அவருக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர். பா.ஜ., 95 சதவீதம் பேர் தங்களால் முடிந்த அளவு பணியாற்றி உள்ளனர். குமாரசாமி அமல்படுத்திய பல மக்கள் நலத் திட்டங்களை, பெண்கள் யாரும் மறக்கவில்லை.ஹாசன் பென்டிரைவ் வழக்கு, சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் உண்மை வெளிவரும். இவ்விஷயத்தில் எங்கள் கட்சி தலையிடாது. விசாரணை குழுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணா மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் தவறு தான். ஆனால் அதை சாலையில் வீசியெறிந்திருக்க கூடாது.நல்ல குடும்பத்து பெண்ணை தெருவுக்கு அழைத்து வந்தவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்களோ அனைத்தும் வெளியே வரும். இது தொடர்பாக எங்கள் கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் குழுவில் பேசப்பட்டது.முன்னாள் பிரதமர் பேரனை கட்டம் கட்டவே இதுபோன்று செயலில் ஈடுபட்டுள்ளனர். முறையான விசாரணை நடத்தி, ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ள வீடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆதாயத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை