மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago
பெங்களூரு, : லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், காங்கிரஸ் மேலிடத்துக்கு புதிய தலைவலி துவங்கியுள்ளது. மூன்று துணை முதல்வர்களை நியமிக்கும்படி, சில அமைச்சர்களே மீண்டும் போர்க்கொடி உயர்த்துகின்றனர். இதன் மூலம் துணை முதல்வர் சிவகுமாரின் செல்வாக்கை குறைக்க, அவரது எதிரி கோஷ்டியினர் கை கோர்த்துள்ளனர்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. துணை முதல்வராக, காங்., மாநில தலைவர் சிவகுமார் பதவி வகிக்கிறார். சில ஆண்டுகளாகவே, சிவகுமார், சித்தராமையா இடையே ஒருங்கிணைப்பு இருந்தது இல்லை. சட்டசபை தேர்தல் முடிந்த போது, முதல்வர் பதவிக்காக இருவருக்கும் பலத்த போட்டி எழுந்தது. இதில் சித்தராமையா கை ஓங்கியது. 'கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க கூடாது, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில், தன்னையே நீட்டிக்க வேண்டும்' என்ற நிபந்தனைகளுடன், துணை முதல்வர் பதவியை சிவகுமார் ஏற்று கொண்டதாக கூறப்பட்டது. அரசு அமைந்த சில மாதங்களிலேயே, அமைச்சர்கள் ராஜண்ணா, ஜமீர் அகமதுகான், மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோளி, மூத்த தலைவர் பசவராஜ் ராயரெட்டி உட்பட பலரும் கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என, போர்க்கொடி உயர்த்த துவங்கினர்.இது காங்கிரசில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிவகுமாரின் ஆதரவாளர்கள் கொதிப்படைந்தனர். அமைச்சர்களின் வாய்க்கு பூட்டு போடும்படி வலியுறுத்தினர். சிவகுமாரும் கூட, பகிரங்கமாகவே அமைச்சர்களை கண்டித்தார். இதை தீவிரமாக கருதிய மேலிடம், முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து, வாய் திறக்க கூடாது என, கட்டளையிட்டது. அதன்பின் அமைச்சர்கள் மவுனமாக இருந்தனர்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வெறும் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பெங்களூரு ரூரல் தொகுதியில், சுரேஷ் தோற்றதால் அவரது அண்ணன் துணை முதல்வர் சிவகுமாருக்கு, பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது கட்சியில் உள்ள அவரது எதிரி கோஷ்டியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, அவரது செல்வாக்கை குறைக்க முயற்சிக்கின்றனர். இதற்காகவே கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என, மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். குறிப்பாக, முதல்வர் சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள், இந்த விஷயத்தில் கூட்டு சேர்ந்துள்ளனர். ஒருவர் பின் ஒருவராக குரல் கொடுக்கின்றனர். கட்சி மேலிடத்துக்கு இதனால் தலைவலி துவங்கியுள்ளது. துணை முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளோருக்கு, மீண்டும் ஆசை துளிர் விட்டுள்ளது. தனக்கெதிராக கடசிக்குள் நடக்கும் சதியை, சிவகுமார் எப்படி முறியடிப்பார் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது:துணை முதல்வர் பதவி கேட்பதில், எந்த தவறும் இல்லை. அனைத்து சமுதாயத்தினருக்கும், தங்கள் சமுதாயத்தினருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். லிங்காயத், தலித், முஸ்லிம் சமுதாயங்களுக்கு, துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.நாங்களும், வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஆனால் இதைப்பற்றி கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி கிடைக்கா விட்டாலும், அதிருப்தி அடையமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா கூறியதாவது:கர்நாடகாவில் மூன்று துணை முதல்வர்கள் பதவி உருவாக்குவதில், என்ன பிரச்னை. நான் ஆரம்பத்தில் இருந்தே, கூடுதல் துணை முதல்வர் வேண்டும் என, கூறி வந்தேன். இதற்கிடையே லோக்சபா தேர்தல் நடந்ததால், இதை பற்றி பேசக்கூடாது என, கட்சியின் தேசிய தலைவர் கூறியதால், மவுனமாக இருந்தோம்.நான் துணை முதல்வர் பதவியை, எதிர்பார்க்கவில்லை. இனி நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். அரசியல் ஓய்வு பெற ஆலோசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.....புல் அவுட்....மாநிலத்தில் மூன்று துணை முதல்வர் பதவிகளை உருவாக்க வேண்டும் என்பதை நானும் ஆமோதிக்கிறேன். அமைச்சர்கள் கூறியதில், தவறேதும் இல்லை. அவர்கள் பேசியது சரியாகவே உள்ளது.- சதீஷ் ஜார்கிஹோளி, அமைச்சர், பொதுப்பணித்துறை
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago