உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஷ்கர் பயங்கரவாதியின் கருணை மனு : ஜனாதிபதி நிராகரிப்பு

லஷ்கர் பயங்கரவாதியின் கருணை மனு : ஜனாதிபதி நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பயங்கரவாதி முகமது ஆரிப் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.கடந்த 2000 டிச.,22ல் டில்லி செங்கோட்டையில் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜபுத்திர ரைபிள் படையினரை நோக்கி சராமாரியாக சுட்டனர். இச்சம்பவத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.இத்தாக்குதல் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப் என்ற அஷ்பக் மற்றும் 6 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், முகமது ஆரிப்பிற்கு 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.தண்டனையை எதிர்த்து முகமது ஆரிப் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நிராகித்த நீதிபதி மரண தண்டனையை உறுதி செய்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு கடந்த 2011ல் தள்ளுபடியானது. இதையடுத்து மரண தண்டனையை உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் மரண தண்டனையை ரத்து செய்ய கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் முகமது ஆரிப் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவை இன்று பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்வு மனுவை நிராகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 07:41

நமது நாட்டின் சட்டம் மற்றும் நீதி முறை மாற்றப்பட வேண்டும்.... குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை விரைவில் கிடைக்க வேண்டும்... இவனுக்கு இவ்வளவு நாட்கள் இவனுக்கு தண்டனை கொடுக்காமல் பிரியாணி விருந்து வைத்து இருக்கிறார்கள்.


Anbuselvan
ஜூன் 12, 2024 22:31

இதையே நமது நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு நிராகரித்து இருந்தால் தக்க பாடமாக இருந்திருக்கும்.


Sankar Ramu
ஜூன் 12, 2024 21:58

நல்ல வேலை தமிழன்னா இல்லை. திராவிட சொம்புகள் விடுதலை செய்யனும்னு போராடுங்க.


visu
ஜூன் 12, 2024 21:11

தண்டத்துக்கு வச்சு பிரியாணி போடுவானேன் 2000 இல் நடந்த தாக்குதலுக்கு இவ்வளவு நாளா இதையெல்லம் விரைவு நீதிமன்றங்களில் விசாரித்து ஒரு வருடத்துக்குள் அனைத்து மேல்முறையீடுகளும் முடிந்து தண்டனை வழங்க வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 12, 2024 20:37

தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள். நாளை, ஒருவேளை, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அந்த பாவிக்கு மன்னிப்பு அளித்து தண்டனையை நிறைவேற்றாமல், விடுதலை கொடுத்தாலும் வியப்பதற்கில்லை.


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 07:44

அதற்க்கு வாய்ப்பே இல்லை.. நாட்டு மக்கள் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வரும் அந்த தவறை மட்டும் செய்யவே மாட்டார்கள்.... கான் கிராஸ் கட்சி அவர்களின் தீவிரவாத ஆதரவு பேச்சுக்களால் நாட்டு மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட கட்சி.


Anu Sekhar
ஜூன் 12, 2024 20:12

இரண்டு ராணுவ வீரர் களை கொன்ற பாவிக்கு என்ன இரக்கம் ? மற்ற பாவிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.


M Ramachandran
ஜூன் 12, 2024 20:01

நம் நாட்டில் தீவிர வாதத்திற்கு இட மில்லை. அச்செயலில் ஈடு படு வோருக்கு மரண தண்டனிய்ய தவிர வேறு தண்டனை கொடுக்க கூடாது. அந்த நபரை ஆதரிப்போருக்கும் கடுமையான தண்டனை அவசியம். சகிப்பு தன்மைக்கும் எல்லையுண்டு அப்பாவி மக்கள் கொல்ல படுவதில் தண்டனையில் தயவு தாட்சண்யம் கிடையாது


rsudarsan lic
ஜூன் 12, 2024 19:36

2005ல் தாக்குதல், 2011ல் தள்ளுபடி, 2024ல் நிராகரிப்பு, என்ன நாடு இது?


SANKAR
ஜூன் 12, 2024 21:07

2000 not 2005


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 12, 2024 18:57

கருத்து சுதந்திரம் எனறு கருத்து தெரிவித்தால் ஒன்று அரசால் கைது செய்யப்படுவோம் ... இல்லையேல் தீவிரவாதிகளால் தாக்கப்படுவோம் .. நமக்கு ஏன் வம்பு...எதற்கு வம்பு


M Ramachandran
ஜூன் 12, 2024 18:56

இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் தேசத்துரோக வழக்கில் இவ்வளவு நாட்கள் இழுத்தடிப்பதில்லை. இவனால் கொல்ல பட்டவர்கள் உயிருக்கு என்ன சமாதானம் இந்த நீதி மன்றம் கூற போகிறது. தேச த்ரோயாக வழக்கிற்கு தனி நீதி மன்றம் நியமிக்க பட வேண்டும் அல்லது ராணுவ நீதி மன்றம் தீர்ப்பு சரியாக இருக்கும்


மேலும் செய்திகள்