உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள லட்சுமண் சவதி உத்தரவு

வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள லட்சுமண் சவதி உத்தரவு

பெலகாவி: ''கிருஷ்ணா ஆற்றில், அதிக தண்ணீர் செல்கிறது. வெள்ளப்பெருக்கு சூழ்நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள்,'' என அதிகாரிகளுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி உத்தரவிட்டுள்ளார்.பெலகாவி, அதானியில் நேற்று அவர் அளித்த பேட்டி: மழை குறைந்தாலும், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் வடியவில்லை. நாளுக்கு நாள் வெள்ளம் அதிகரிக்கிறது. கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள கிராமங்கள், வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளன. சூழ்நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். முன்னெச்சரிக்கையாக, அபாயத்தில் உள்ள கிராமத்தினரை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்ற வேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் வெள்ள அபாயம் உள்ள கிராமங்களில் முகாமிட்டு, சூழ்நிலையை கண்காணிக்க வேண்டும். வெள்ள பாதிப்பு கிராமங்களை, நான் நேரில் சென்று, ஆய்வு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை