மேலும் செய்திகள்
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்
1 hour(s) ago
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்
2 hour(s) ago | 42
பெங்களூர : பெங்களூரு புறநகர் பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே வந்த சிறுத்தை குட்டிக்கு, தண்ணீர் தர முயற்சித்த பஸ் ஓட்டுனரை தாக்க முயற்சித்தது. வனத்துறையினர் சிறுத்தையை மீட்டுச் சென்றனர்.பெங்களூரு, கெங்கேரி - சிக்ககவுடாபாளையாவுக்கு பி.எம்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது. துரஹள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே சிறுத்தை குட்டி ஓடி வந்தது. உடனடியாக ஓட்டுனர் பஸ்சை நிறுத்தினார்.கதவுகளை மூடும்படியும், யாரும் கதவை திறக்க வேண்டாம் என்றும் பயணியரை ஓட்டுனர் எச்சரித்தார். மேலும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.பஸ்சுக்கு அடியில் குட்டி படுத்துக் கொண்டது. வெயிலின் தாக்கத்தால் இருக்கலாம் என்ற எண்ணத்தில், சிறுத்தைக்கு பஸ் டிரைவர் தண்ணீர் வைத்தார். அதை குடித்தவுடன், அங்கிருந்தவர்களை தாக்க முற்பட்டது. அதிகளவில் பலரும் குவிந்ததால், மீண்டும் பஸ்சின் அடியில் சென்றுவிட்டது.அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், சிறுத்தையை மீட்டு, பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். இதன் தாய் சிறுத்தையை தேடி வருகின்றனர். 'எட்டு மாதங்களே ஆன சிறுத்தை குட்டியின் காலில் காயம் ஏற்பட்டிருந்தது. வாகனம் மோதியதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு ஏற்பட்டது.
1 hour(s) ago
2 hour(s) ago | 2
2 hour(s) ago | 42