உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில் கட்டி மோடியை கும்பிடுவோம்: மம்தா பானர்ஜி கிண்டல்

கோவில் கட்டி மோடியை கும்பிடுவோம்: மம்தா பானர்ஜி கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா : ''பிரதமர் மோடி தன்னை கடவுள் என்கிறார். அவருக்கு கோவில் கட்டி நாங்கள் வழிபடுவோம்; பிரசாதமும் வழங்குவோம். அவர் விரும்பினால், 'டோக்லா' சிற்றுண்டியை வைத்து படையல் போடுவோம்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிண்டலாக தெரிவித்தார்.லோக்சபா தேர்தலையொட்டி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு, சமீபத்தில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, 'நான் மனிதப் பிறவி அல்ல. இந்த உலகில் ஏதோவொன்று செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, பரமாத்மா என்னை அனுப்பி உள்ளார்' என்றார். பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர். இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தன்னை கடவுள்களின் கடவுள் என்கிறார். அவர் இப்படி தெரிவிக்க, பா.ஜ., நிர்வாகி ஒருவர், 'கடவுள் ஜெகன்நாதர் பிரதமர் மோடியின் பக்தர்' என்கிறார். பிரதமர் மோடி கடவுள் என்றால் அரசியல் செய்யக்கூடாது; கலவரத்தை துாண்டிவிடக்கூடாது. நாங்கள் மோடிக்கு கோவில் கட்டி வழிபடுவோம். பூ, மாலை, பிரசாதம் வழங்குவோம். அவர் விருப்பப்பட்டால், 'டோக்லா' சிற்றுண்டியையும் வைத்து, படையல் போடுவோம். என்னை அதிகம் நேசித்த வாஜ்பாய் போன்ற பல பிரதமர்களுடன் நான் பணியாற்றி உள்ளேன். ராஜிவ், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங், தேவகவுடா போன்ற பிரதமர்களுடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், மோடியை போல யாரையும் நான் பார்த்ததில்லை; இப்படிப்பட்ட பிரதமர் நமக்கு தேவையே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Muthu Viji
மே 31, 2024 21:03

Pls,wisst,thaji,prkathiswarr,tampul,mutiuma


MARUTHU PANDIAR
மே 30, 2024 21:04

திமிரு எப்போ தான் அடங்குமோ


saravanan
மே 30, 2024 17:35

நற்கதிரை கண்டு அற்ப பதர்கள் ஏன் பதற வேண்டும் மோடிஜி எதை செய்தாலும் ஏன் இந்த பதர்கள் இப்படி வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கின்றன பிரதமர் எது பேசினாலும், அவரின் உடை, ஏன் தாடி கூட எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட து. இப்போது தியானம் செய்தாலும் இவர்களை கேட்டுகொண்டுதான் செய்ய வேண்டுமோ? மோடிஜி வேண்டாமென்றாலும் அவர் தியானிப்பதை இன்றைய மீடியாக்கள் விட்டுவிடுமா என்ன? ஒரு சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த ஒருவர், எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத ஒருவர் மக்களின் நன்மதிப்பை பெற்று தொடர்ச்சியாக பத்தாண்டுகள் நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்து, ஒரு பரந்துபட்ட தேசத்தை ஆள்வதெல்லாம் இறை அனுக்கிரகம் அன்றி வேறென்ன தொன்மை மொழியாம் தமிழில் இறை என்பது ஆண்டவனையும் குறிக்கும், ஆள்வோனையும் குறிக்கும் என்பதை மம்தாவிடம் யாராவது எடுத்து சொல்லுங்க ள்.


venugopal s
மே 30, 2024 17:11

இப்படி எல்லாம் சாமியைக் கிண்டல் பண்ணக் கூடாது. அப்புறம் ராத்திரி தூங்கும் போது சாமி வந்து கண்ணை நோண்டி எடுத்து விடும்!


enkeyem
மே 30, 2024 16:43

வாழ்த்துகிற மாதிரி மோடியை கிண்டல் செய்கிறதாக நினைப்போ? பார்த்தது அம்மணி. நீ மலைபோல் நம்பியிருக்கும் ரோஹிங்கிய மூர்க்கங்கள் உனக்கு சமாதி கட்டிவிடப் போகிறார்கள்


Balasubramanian
மே 30, 2024 15:26

ஜிதாத்மன: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: | சீதோஷ்ண சுகதுக்கேஷு ததா மான அபமானயோ: || பகவத் கீதை அத்தியாயம் ஆறு சுலோகம் ஏழு! தன்னை வென்று வெப்பம் குளிர் சுகம் துக்கம் மானம் அவமானம் என்கிற எந்த நிலையிலும் அமைதி காத்து அந்த பரமாத்மாவின் நினைவில் என்றும் தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்ட யோகிகள் (தியானம் மூலம்) அவனுடன் தன்னை ஐக்கிய படுத்திக் கொள்கிறார்கள் - மோடிஜி கூறிய இந்த பரமார்த்த தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் பலர் ஏதேதோ பிதற்றுகின்றனர்


TAMIZ JOSH
மே 30, 2024 17:45

முட்டு கொடு மாமா நல்லா முட்டு கொடு,ஓட்டு பொறுக்க ஒருவன் ஏதோ பிதற்றுவான், Paper படித்து,ஸ்லோகம் padika பேச தெரிந்த நீங்கள் இப்படி... இதை விட தெய்வ நிந்தை வேறு ஏதுவாக இருக்கும்,நீங்கள் வணங்கும் பகவான் உங்களை மன் நிபாராக


Selvam
மே 30, 2024 13:24

எங்களுக்கு அவர் என்றும் மோடிஜீ அவர்கள் கடவுள் தான்


Ramesh Sargam
மே 30, 2024 12:23

ஜூன் 4 -ஆம் தேதிக்கு பிறகு இப்படி இவர் மமதா கிண்டலடிப்பாரா பார்க்கலாம்.


Anand
மே 30, 2024 11:19

நீ கிண்டலடித்தாலும் பிறகு வரும் சந்ததியினர் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.


C.Ayyappan
மே 30, 2024 11:02

ஏற்கனவே முஸ்லீம் பெண்கள் அவருக்கு கோவில் கட்டி உள்ளார்கள் .செய்தி படிப்பது இல்லையோ தீதி .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை