உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் ஆட்சி அமைப்போம்: அடித்து சொல்கிறார் அமித்ஷா

ஒடிசாவில் ஆட்சி அமைப்போம்: அடித்து சொல்கிறார் அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஒடிசாவில் நாங்கள் ஆட்சி அமைப்போம். அங்கு, 17 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.இது குறித்து பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அமித்ஷா அளித்த பேட்டி: பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விரிவான ஆலோசனைக்கு பின், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவுகளும் குறையும். ஒடிசாவில் நாங்கள் ஆட்சி அமைப்போம். அங்கு 17 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

இடஒதுக்கீடு

ராகுல் தோல்வியை மறைக்க, தந்திரமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது குறை கூறுவார். காங்கிரஸ் உத்தரவாதங்களை ஒருபோதும் நிறைவேற்றாது. ஓபிசி இடஒதுக்கீட்டைக் காப்பது எங்கள் நோக்கம். பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் பா.ஜ.,வின் பலம் தான். நாங்கள் 400 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு, காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இண்டியா கூட்டணி

பீஹார் மாநிலம் கைமுர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது. 6 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 5 கட்ட தேர்தல்களுக்குப் பிறகு, 310 தொகுதிகளை பிரதமர் மோடி கைப்பற்றி உள்ளார். இண்டியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளின் இடஓதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
மே 26, 2024 17:25

இதை எப்படி கூறலாம் முன்பே செட்டிங் செய்துவிட்டார்கள் என்று மிக உயர்ந்த இடத்தில வழக்கு தொடர்வார்கள் அவர்களும் எப்போதும் போல் அவர்களுக்கு சாதமாக ... அரசியல் கட்சிகள் மற்றும் சமூக விரோதிகள் எதையும் விமர்சிக்கலாம், வாக்காளர்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை, வாழ்த்துக்கள், வந்தே மாதரம்


அரசு
மே 26, 2024 16:29

அமித் ஷா சொன்னா போதுமா? மக்கள் சொல்லனும். 4 ஆம் தேதி எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிடும்.


Syed ghouse basha
மே 26, 2024 16:25

ஒடிசாவில் அல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இனி பஜக ஜெயிக்காது மித் பாரத் பஜக


Rvelmurugan
மே 26, 2024 16:22

இரட்டை எஞ்சின் சர்கார் ஆட்சி நடை பெறட்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை