மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
புதுடில்லி:கடந்த 2017ம் ஆண்டு 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அடித்துக் கொன்ற, 25 வயது இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமித் சஹ்ராவத் கடந்த வாரம் அளித்த தீர்ப்பு:சிறு குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு கருணையின்றி அந்தக் குழந்தையின் மீது கற்களை எறிந்து கொன்றுள்ளார்.அவர் செய்த குற்றங்களுக்காக, சிறார் என்ற முறையில் அவருக்கு எந்த சலுகையும் காட்டப்படாது. கொலை குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதுவே அவருக்கு குறைந்தபட்ச தண்டனை தான். பலாத்கார குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடாக 17 லட்ச ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
6 hour(s) ago | 2
12 hour(s) ago