உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாழ்வே மாயம்; காப்பீடுக்கு வரியா? நிர்மலாவை கேட்கிறார் நிதின் கட்கரி

வாழ்வே மாயம்; காப்பீடுக்கு வரியா? நிர்மலாவை கேட்கிறார் நிதின் கட்கரி

புதுடில்லி :'ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலுத்தப்படும் தவணைத் தொகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை திரும்பப் பெற வேண்டும்' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.நாடு முழுதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்ற புதிய வரி முறையை, 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.இதையடுத்து, நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டது. இதில், காப்பீடு திட்டங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.

நிச்சயமற்ற வாழ்வு

இந்நிலையில், காப்பீடு திட்டங்கள் மீதான இந்த வரியை திரும்ப பெற வேண்டும் என மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆயுள் காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சமீபத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.வரி விதிப்பு தொடர்பான ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அவர்கள் முன்வைத்த கோரிக்கையை சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் தவணைத் தொகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீடு தவணைக்கு இது போன்ற வரி விதிப்பது, நம் வாழ்வின் நிச்சயமற்ற சூழலுக்கு வரி விதிப்பதற்கு சமம். வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை கருதி, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே, ஒருவர் காப்பீடு திட்டத்தில் இணைகிறார்.

பெரும் சுமை

அவ்வாறு எடுக்கப்படும் காப்பீடு திட்ட தவணைத் தொகைக்கு வரி விதிப்பது, மூத்த குடிமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இது தவிர, சமூகத்தில் இது தனிநபருக்கும் அவசியமான ஒன்றாகவும் உள்ளது. எனவே, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு தவணைத் தொகைக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலோசனைக்கு முன்னுரிமை அளித்து, பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ms Mahadevan Mahadevan
ஆக 02, 2024 22:14

நிர்மலா அம்மையாருக்கு ஏழைகள் நடுத்தர மக்கள் பற்றி தெரியாது. அரசின் வெட்டி சிலவுகளை விளம்பர சிலவுகளை குறைதாலே மக்களுக்கு நன்மைகள் செய்யலாம். உணவு பொருள்,மருந்து, மீது உள்ள வரியை குறைக்கலாம். பிஜேபி ஏழை பற்றி கவலை படாத நன்கொடை தரும் கார்பரேட் கம்பெனிகளை பற்றி கவலைப்படும். தாஇன் வாங்கும்சக்தி குறைந்து உள்ளது. 2012 இல் ரூபாய் இன் வாங்கும் சக்தி என்ன. இன்று ரூபாய் இன் சக்தி என்ன?


அளகேஷ்
ஆக 01, 2024 13:52

செத்துப் போனாலும் பிரிமியம். கட்டலேன்னா புதைக்கவோ, எரிக்கவோ முடியாதாம். குளிர்கால கூட்டத் தொடரில் புது சட்டம் வருதாம். நித்தியும், பாபுவும் ஓக்கே சொல்லியாச்சாம். புடி ஆளுக்கு 15000 கோடி. அம்ரித் கால் ஹைன்.


Nandakumar Naidu.
ஆக 01, 2024 13:22

இதையும் அரசியல்லாக்குவார்கள் கேடு கெட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி.


Velan Iyengaar
ஆக 01, 2024 16:18

அரசியல் ஆக்காமல் அவியலா ஆக்குவார்கள் ?? பேசுவது ஒரு அரசியல்வாதி .. அதுவும் ஆளும்கட்சி அரசியல்வாதி .. பேச்சு ஆளும் தரப்புக்கு எதிராகவே இத பிற கட்சிகள் விடுவார்களா ??


vetri
ஆக 01, 2024 10:51

பிரதமர் மோடி அமைச்சரவையில் இருக்கிற ஒரு நல்ல மனிதர் என்றால் அது நிதின் கட்கரிதான். நிதி அமைச்சர் மக்களை சந்தித்து வெற்றி பெற்றால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கஷ்டங்கள் தெரிந்திருக்கும்... இவரை போன்றவர்களால் தான் கட்சி அவப்பெயர்


துறவி
ஆக 01, 2024 10:38

நாய் வித்த காசு குரைக்காது. எப்பிடி உருவினாலும் ஓக்கே ஜீ.


Muralidharan S
ஆக 01, 2024 10:31

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி... தனியார் துறையில் நடுத்தர மாத சம்பளம் வாங்கும் மக்கள் பிழியத்தான் படுகிறார்கள். வருமானவரி பிடித்தம் போகத்தான் மீதி சம்பளம். வேலை நிரந்தரம் என்பது கிடையாது. இதையும் தாண்டி, குழந்தைகளின் கல்வி, தங்கள் குடும்பத்திற்கு மருத்துவம், எதிர்கால ஓய்வு காலத்திற்கு சேமிப்பு இப்படி எல்லாம் அவர்கள் சம்பளத்திலேயே அடக்கம். இப்படி தங்கள் வாழ்க்கையை தாங்களே தங்கள் வருமானத்தில் நடத்திக்கொள்ளும் மக்கள் தங்கள் எதிர்காலத்திற்கு காப்பீடு எடுக்கும் பொழுது அதற்கும் வரி விதிப்பது கொடுமையிலும் கொடுமை.. வரி ஏய்ப்பு செய்பவர்களும், அரசியல் வாதிகளும் மட்டும்தான் வாழமுடியும் இந்த நாட்டில்.. மற்றவர்களுக்கு நிலைமை... வயிற்றிற்கும் வாயிற்கும் மட்டுமே...


Swaminathan Nath
ஆக 01, 2024 10:26

நிதின் பொதுவாகத்தான் கடிதம் எழுதினார், இதில் எங்கு வருகிறது ஜாதி, எப்போதும் ஜாதி அரசியல் கீழ்த்தரமானது, உங்கள் தரம் கெட்ட அரசியல்.


P. SRINIVASALU
ஆக 01, 2024 09:50

இவரைபோன்றவர்கள் பிரதானமந்திரி ஆகவேண்டும். மோடி, நிர்மலா சீதாராமன் போன்றவர்களின் போக்கை மாற்ற.


Velan Iyengaar
ஆக 01, 2024 09:47

நியாயஸ்தன் .... மனசாட்சி இருக்கும் ஒரு நல்ல மனிதன் ... அந்த கட்சில இது வெகு அபூர்வம் ....


Barakat Ali
ஆக 01, 2024 09:43

வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட கள்ளப்பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பதினைந்து லட்சம் தருவோம் என்று மோடி சொன்னது உண்மையே என்று கூறி இவர்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் ....


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ