உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான ஊழலால் கெஜ்ரிவால் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி: மத்திய அமைச்சர் வைஷ்ணவ்

மதுபான ஊழலால் கெஜ்ரிவால் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி: மத்திய அமைச்சர் வைஷ்ணவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கு விவகாரம், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மதுபான கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு உள்ளது. இந்த ஊழலில் கிடைத்த பணத்தை அவர், நேரடியாக பயன்படுத்தினார். மதுபான ஊழல் அவரது அரசியல் வாழ்க்கையில் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. அவர்களுடன் இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது. டில்லியை கொள்ளையடிக்க இரு கட்சிகளும் கூட்டணியை அமைத்துள்ளன.மலை போன்ற குப்பையை அகற்றுவது, டில்லியை சுத்தம் செய்வது என, அவர்கள் அளித்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. டில்லிக்கு தண்ணீர் வழங்குவதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் மதுபானத்தில் அவர்கள் முழு கவனம் செலுத்தினர். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என, கெஜ்ரிவால் கூறுவார். ஆனால் முழு ஆதாரங்களையும் நீதிமன்றங்களில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rama adhavan
ஜூலை 11, 2024 20:58

2008 ரவுடி பட்டியலில் இருந்தவர் இப்போது அரசியலில் மாநில தலைவர் என படித்தேன் . எனவே அரசியலில் வீழ்ச்சி குறைவே. அரசியல்வாதி தஞ்சாவூர் தலை ஆட்டி பொம்மை போல். எவ்வளவு ஆட்டினாலும் விழ மாட்டார்கள். சிறிது ஆடுவார்கள். அவ்வளவு தான்.


P. VENKATESH RAJA
ஜூலை 11, 2024 19:54

ஊழல் வழக்கில் காவலில் உள்ள கெஜ்ரிவாலை வெளியே விடாதீர்கள்


Jysenn
ஜூலை 11, 2024 18:42

AK case is almost done and dusted. Now look east into WB and south into TN.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை