| ADDED : ஜூலை 30, 2024 07:39 AM
பெங்களூரு: தொடர்ந்து புகார்கள் வந்ததால், லோக் ஆயுக்தா நீதிபதிகள் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் திடீர் வருகை தந்து ஆய்வு செய்தனர்.'பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை.அலட்சியம் காண்பிக்கின்றனர்' என, லோக் ஆயுக்தாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.எனவே நேற்று மதியம் லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், உப லோக் ஆயுக்தா நீதிபதி பனிசந்திரா, நீதிபதி வீரப்பா, விக்டோரியா மருத்துவமனைக்கு, திடீர் வருகை தந்தனர்.வார்டுகளை சுற்றி வந்து, சூழ்நிலையை பார்வையிட்டனர். நோயாளிகளிடம் பிரச்னைகளை கேட்டறிந்தனர். பின் லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் அளித்த பேட்டி:மருந்துகள் கொடுத்தது குறித்து, ரிஜிஸ்டர் புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. மூன்று பேரை, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக நியமித்துள்ளனர். நாங்கள் சோதனை நடத்தியபோது, எமர்ஜென்சி மெடிசன்ஸ் இருக்கவில்லை. ஒப்பந்ததாரருக்கு பில் தொகையை வழங்காததால், அவர் மருந்துகள் சப்ளை செய்வதை நிறுத்தி உள்ளார்.புறநோயாளிகள் பிரிவில் எந்த டாக்டரையும் பார்க்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.