மேலும் செய்திகள்
சிறுவாபுரி உண்டியலில் காணிக்கை ரூ.98 லட்சம்
07-Feb-2025
சாம்ராஜ் நகர்: மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியலில், 28 நாட்களில் 1.94 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.சாம்ராஜ் நகர், ஹனுாரின் மலை மஹாதேஸ்வரா கோவில், கர்நாடகாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோவிலின் வருவாய் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.மாதந்தோறும் உண்டியல் எண்ணுவது வழக்கம். கடந்த 28 நாட்களுக்கு முன், உண்டியல் திறக்கப்பட்டது. 1.50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலானது. நேற்று முன் தினம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. காலை 6:30 மணிக்கு துவங்கிய பணி மாலை 6:50 வரை நீட்டித்தது.இ - உண்டியலில் 3.30 லட்சம் ரூபாய் உட்பட, 1 கோடியே 94,49,243 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. 63.6 கிராம் தங்கம், 1.50 கிலோ வெள்ளி பொருட்கள், 11 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.
07-Feb-2025