UPDATED : ஜூலை 25, 2024 01:44 PM | ADDED : ஜூலை 25, 2024 01:18 PM
மும்பை: மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, புனேயில் 4 பேர் உயிரிழந்தனர். வெள்ளப் பாதிப்புகளை அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் ஆய்வு செய்தார். மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று (ஜூலை 25) மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. வெள்ளம் காரணமாக மும்பை புறநகர் ரயில் சேவை முடங்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o1i9lm82&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் மும்பை மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். புனே மற்றும் கோலாப்பூரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வார்தா, நாக்பூர், கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா மற்றும் சந்திராபூர் மாவட்டங்களில் இன்று(ஜூலை 25) கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புனேயில் கனமழையால், 4 பேர் உயிரிழந்தனர். வெள்ளப் பாதிப்புகளை அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் ஆய்வு செய்தார். கோலாப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையை அடுத்து, பஞ்சகங்கா நதி நிரம்பியது.