உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியவர் போல் வேடமிட்டு கனடா செல்ல முயன்றவர் கைது

முதியவர் போல் வேடமிட்டு கனடா செல்ல முயன்றவர் கைது

வசந்த் விஹார்: போலி பாஸ்போர்ட் மூலம் முதியவர் போல் வேடமணிந்து, கனடாவுக்குச் செல்ல முயன்ற 24 வயது இளைஞர் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு பயணியின் நடவடிக்கையில் சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.அவரது பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்தபோது, ரஷ்விந்தர் சிங் சஹோதா, 67, என்று தெரிந்தது. எனினும் அவரது நடவடிக்கைகள் விசித்திரமாக இருந்தது. அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் வயதான தோற்றத்தை செயற்கையாக உருவாக்கியது தெரியவந்தது.அனைத்தையும் கலைத்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். குரு சேவக் சிங், 24, என்பது தெரிய வந்தது. ஆள் மாறாட்டம் செய்து, போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்றதற்காக டில்லி போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.அவர், எதற்காக முதியவர் போல் வேஷம் போட்டு, கனடா செல்ல முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ