வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தவிர்க்க முடியாதது ..... ஆனால் முதலில் முற்றாக அழியப்போகும் உயிரினம் மனித இனம் என்கிறார்கள் .....
போபால்: உத்திர பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் ஓநாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தின் பஹ்ராச் மாவட்டம் மாஷி தாலுகாவில் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழையும் ஓநாய்கள் மனித வேட்டையாடுகின்றன. சிறு குழந்தைகளை இழுத்துச்சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளன. இதுவரை ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் கொன்றுள்ளன. ஓநாய்களை பிடிக்க வனத்துறை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டம் மல்கோவான் கிராமத்திற்குள் நேற்று ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையாடியதில் 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி ஓய்நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தவிர்க்க முடியாதது ..... ஆனால் முதலில் முற்றாக அழியப்போகும் உயிரினம் மனித இனம் என்கிறார்கள் .....