மேலும் செய்திகள்
பழவேற்காடில் குவிந்த பிளமிங்கோ பறவைகள்
17-Aug-2024
மலை நாடு மாவட்டம் என்று அழைக்கப்படும், ஷிவமொகாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்பு உள்ளது. ஷிவமொகா அருகே மண்டகத்தே பறவை சரணாலயம் சுற்றுலா பயணியரை, கவரும் வகையில் உள்ளது. அந்த சரணாலயத்தை பற்றி பார்க்கலாம்.ஷிவமொகாவில் இருந்து தீர்த்தஹள்ளி செல்லும் வழியில் உள்ளது மண்டகத்தே கிராமம். இந்த கிராமத்தில் ஓடும் துங்கா ஆற்றின், கரையை ஒட்டி அமைந்துள்ளது மண்டகத்தே பறவை சரணாலயம்.சுமார் 1.14 ஏக்கர் பரப்பளவில் தீவுக்குள் இருப்பது போல அமைந்துள்ள சரணாலயம், ஏராளமான பறவைகளின் புகலிடமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரை 5,000க்கும் மேற்பட்ட, வெளிநாட்டு பறவைகள் இந்த சரணாலயத்திற்கு வரும். டார்டர்ஸ், மீடியன் எக்ரெட்ஸ், கார்மோரண்டஸ் உள்ளிட்ட அரிய வகை பறவைகளையும் இங்கு காணலாம். ஆற்றில் படகு சவாரி செய்து, மரங்களில் பறவைகள் கூடு கட்டுவதை, மிக அருகில் இருந்து கண்டு ரசிக்கலாம்.சரணாலயமும், அங்கு செல்லும் பாதையும் பச்சை, பசலேன காட்சி அளிக்கும். பறவைகளின் கீச்... கீச் சத்தத்தை கேட்கும் போது, மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படும். இதனால், இந்த சரணாலயம் சுற்றுலா பயணியரை, வெகுவாக கவரும். கேமராக்கள் எடுத்து சென்றால், கண்களுக்கு விருந்தளிக்கும் பறவைகளை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து வரலாம்.எப்படி செல்வது?இந்த சரணாலயம் பெங்களூரில் இருந்து 345 கி.மீ., துாரத்திலும், ஷிவமொகாவில் இருந்து 30 கி.மீ., துாரத்திலும் அமைந்து உள்ளது. பெங்களூரில் இருந்து ஷிவமொகாவுக்கு பஸ், ரயில், விமானம் வாயிலாக செல்ல முடியும். அங்கிருந்து ஆட்டோ, டாக்சியில் பயணிக்கலாம்- நமது நிருபர் -.
17-Aug-2024