உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றியை எதிர்த்து மேனகா வழக்கு

சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றியை எதிர்த்து மேனகா வழக்கு

லக்னோ: உ.பி. சுல்தான்பூர் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யை வெற்றியை எதிர்த்து மேனகா அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜ..,வேட்பாளராக போட்டியிட்ட மேனகா 43,174 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ராம்பால் நிஷாத் என்பவரிடம் தோல்வியுற்றார்.இந்நிலையில் அலகாபாத் ஐகோர்ட்டில் மேனகா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ராம்பால்நிஷாத் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் , குற்றப்பின்னணி குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை வேட்பு மனுவில் மறைத்துள்ளார். எனவே ராம்பால்நிஷா வெற்றி செல்லாது என அறிவிக்க கோரியுள்ளார். இந்த வழக்கு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 10:11

ராம்பால்நிஷா வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியானது வரை இரண்டு மாதங்களுக்கும் அதிகம் மேனகா என்ன செய்து கொண்டிருந்தார் ????


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி