உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களாதேவி கோவில் பார்வதிக்கு அர்ப்பணிப்பு

மங்களாதேவி கோவில் பார்வதிக்கு அர்ப்பணிப்பு

கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. இதில் மங்களாதேவி கோவில் முக்கியமானது. மங்களூரு போலார் பகுதியில் உள்ளது மங்களாதேவி கோவில். 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புராண கதையின்படி விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான பரசுராமனால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.இன்னொரு புராண கதையின்படி, அலுப வம்சத்தின் மன்னரான குந்தவர்மன் என்பவரால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் கேரளா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. கருவறையில் மங்களாதேவி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். கருவறையை சுற்றி மற்ற தெய்வங்களுக்கு சன்னிதியும் உள்ளது.தங்க முலாம் பூசிய கொடிமரம்; கருவறைக்கு செல்லும் வழியில் பல கடவுள்களின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் ஒன்பது நாட்கள் நடக்கும் நவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நிறைவு நாளில் ரத உற்சவம் நடக்கும்.பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ