மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா நேற்று சந்தித்து பேசினார்.ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ஷர்மிளா. இவரது தலைமையில் ஆந்திரா சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆளுங்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசும் படுதோல்வி அடைந்தது.அந்தக் கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, தன் கட்சியை கலைத்து விட்டு, மீண்டும் காங்கிரசில் இணைவது தொடர்பாக, கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருடன் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியானது.இந்நிலையில் பெங்களூரில் சிவகுமாரை, ஷர்மிளா நேற்று சந்தித்து பேசினார்.அதன்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஷர்மிளா, ''இது மரியாதை நிமித்தமான சந்திப்பு,'' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.ஷர்மிளா, ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஆவார். சகோதரனுக்கு எதிராக ஆந்திராவில் ஷர்மிளா அரசியல் செய்து வருகிறார். 'எக்காரணம் கொண்டும் காங்கிரசில் ஜெகன்மோகன் ரெட்டியை இணைத்துக் கொள்ள வேண்டாம்' என, சிவகுமாரிடம் அவர் வலியுறுத்தி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2 hour(s) ago