உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் மழை பெய்யும்; வானிலை மையம் அறிவிப்பு

பெங்களூரில் மழை பெய்யும்; வானிலை மையம் அறிவிப்பு

பெங்களூரு : பெங்களூரில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் 34.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதுவே, இந்த ஆண்டின் அதிகபட்சமாக வெப்பநிலை ஆக உள்ளது.இந்நிலையில், நேற்று வானிலை மையம் வெளியிட்டு அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது. அதில், 'மாநிலத்தில், பெங்களூரு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.'பெங்களூரு, பெங்களூரு ரூரல், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, பல்லாரி, சாம்ராஜ் நகர், சிக்கபல்லாபூர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, ஹாசன், குடகு, கோலார், மாண்டியா, மைசூரு, ராம்நகர், ஷிவமொக்கா, துமகூரு, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11, 12ம் தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.அதே சமயம், 'யாத்கிர், விஜயபுரா, ராய்ச்சூர், கொப்பால், கலபுரகி, ஹாவேரி, கதக், தார்வாட், பீதர், பெலகாவி, பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் வறண்ட வானிலையே தொடரும்' எனவும், வானிலை மையம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை