உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் மோடி ஆதரவு அலை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

தமிழகத்தில் மோடி ஆதரவு அலை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

புதுடில்லி, ''தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெருகியுள்ள மக்கள் ஆதரவு இம்முறை ஓட்டு களாக மாறும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இம்முறை தென் மாநிலங்களில் பா.ஜ., குறிப்பிடத்தக்க வெற்றியை குவிக்கும் என எதிர்பார்க்கிறோம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் தென் மாநிலங்களில் மிகப் பெரிய அலையாக உருவாகி உள்ளது. இது நிச்சயம் ஓட்டுகளாக மாறும். இதன் காரணமாக, தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் சாதகமான தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கிறோம்.பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பை மாற்றும் அபாயம் உள்ள தாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது அபத்தமானது. இதை அவர்கள் இட ஒதுக்கீடுடன் ஒப்பிட்டு குழப்புகின்றனர். இதற்கு நேரடியாகவே பதில் அளிக்கிறேன். கடந்த 2014ல், அரசி யலமைப்பை மாற்றத் தேவையான பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெற்ற போது அதை செய்யவில்லை. கடந்த, 2019ல் மாபெரும் கட்சியாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோது இதை செய்திருந்தால், யாரும் எங்களை கேள்வி கேட்டிருக்க முடியாது. அப்போதும் செய்யவில்லை.எனவே, இட ஒதுக்கீட்டில் நாங்கள் கை வைக்க மாட்டோம். யாரையும் கை வைக்க அனுமதிக்க மாட்டோம். இதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை