மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெங்களூரு,: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் ம.ஜ.த., குற்றஞ்சாட்டி வருகின்றன. இதை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து, பெங்களூரில் நேற்று இரு கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி பங்கேற்றார். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். பேசி கொண்டிருக்கும் போதே, குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அவர் கைக்குட்டையால் துடைத்து கொண்டு தொடர்ந்து பேசினார். ஆனால், மீண்டும் அதிகமாக ரத்தம் கசிந்து, அவரது வெள்ளை சட்டை சிவப்பாகியது. இதைப் பார்த்து, அங்கிருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.பதற்றமான சூழ்நிலை உருவானது. அனைவரும் பயந்தனர். உடனே குமாரசாமியின் மகனும், ம.ஜ.த., இளைஞர் அணி தலைவருமான நிகில், கார் வாயிலாக அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குமாரசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு வீடு திரும்பினார்.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago