உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிராமப்புறங்களில் தண்ணீர் மாசு அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

கிராமப்புறங்களில் தண்ணீர் மாசு அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

பெங்களூரு: ''கிராமப்புறங்களில் தண்ணீர் மாசு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கிராம வளர்ச்சி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரித்துள்ளார்.மைசூரு மாவட்டம், சாமுண்டீஸ்வரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில், சில நாட்களுக்கு முன்பு மாசு ஏற்பட்ட குடிநீரை குடித்ததில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அலுவலர்கள், ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார துறையின் அனைத்து செயல் பொறியாளர்களுக்கு, கிராம வளர்ச்சி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதி உள்ளார்.அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:சமீப நாட்களாக மாநிலத்தின் சில மாவட்டங்களின் கிராமப்புறங்களில் அசுத்தமான குடிநீரால், மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படுகிறது.இத்தகைய சம்பவங்களை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அவ்வப்போது அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும், சில கிராமங்கள் / குடியிருப்பு பகுதிகளில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.குடிநீர் வினியோகத்துக்காக அமைக்கப்பட்ட தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்களை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். குடிநீருடன், கழிவுநீர் கலப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் தண்ணீர் மாசு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ