உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.ஜ.த., - எம்.எல்.சி.,  சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்  பாலியல் வழக்கு

ம.ஜ.த., - எம்.எல்.சி.,  சூரஜ் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்  பாலியல் வழக்கு

பெங்களூரு: வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணாவுக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது.முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மூத்த மகனுமான சூரஜ் ரேவண்ணா, 36, அக்கட்சியின் எம்.எல்.சி.,யாக உள்ளார்.இவர் பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக, கடந்த ஜூன் 22ம் தேதி, அரகலகூடுவைச் சேர்ந்த ஒரு வாலிபரும்; ஜூன் 25ம் தேதி, ஹொளேநரசிபுராவைச் சேர்ந்த மற்றொரு வாலிபரும், ஹெளேநரசிபுரா ரூரல் போலீஸ் நிலையத்தில் தனி தனியாக புகார் அளித்தனர்.அதன்படி, சூரஜ் மீது, இரண்டு அசாதாரண பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, முதல் வழக்கில் மட்டுமே, ஜூன் 23ம் தேதி, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்குகள், சி.ஐ.டி., விசாரணைக்கு, மாநில அரசு மாற்றியது. 2வது வழக்கில், போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.முதல் வழக்கில் சி.ஐ.டி., போலீசார், அவரையும், பாதிக்கப்பட்ட நபர்களையும் அழைத்து வந்து, ஹாசன் கன்னிகடா பண்ணை வீட்டில் ஆய்வு செய்தனர். மூன்று முறை தங்கள் காவலில் எடுத்து சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.இதன் பின், ஜூலை 3ம் தேதி, அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி, பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அதே நாள், அவரை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சூரஜ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இவ்வழக்கு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் நகலை, சிறை நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னரே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார். எனவே நேற்று நேரமாகி விட்டதால், இன்று விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

நிபந்தனைகள் என்னென்ன?

1. நீதிமன்றத்தில் இருந்து, எழுத்துப்பூர்வமான உத்தரவை பெற வேண்டும்.2. புகார்தாரரை நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு கொள்ள கூடாது.3. ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள், விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி, வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும்.4. அடுத்த ஆறு மாதங்கள் வரை அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை, எது முதலில் வருகிறதோ அதுவரை, மேற்கண்டபடி செயல்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ