உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., அரசு மீது பயமில்லை ம.ஜ.த., - எம்.எல்.ஏ., அதிருப்தி 

காங்., அரசு மீது பயமில்லை ம.ஜ.த., - எம்.எல்.ஏ., அதிருப்தி 

யாத்கிர்: எஸ்.ஐ., பரசுராம் மரண விவகாரத்தில், காங்கிரஸ் அரசு மீது ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார்.யாத்கிர் குர்மித்கல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் நேற்று அளித்த பேட்டி:யாத்கிர் எஸ்.ஐ., பரசுராம் மரணம் வேதனை அளிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் என்னிடம் பேசினார். சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது பற்றி கூறி வருத்தப்பட்டார். கவலைப்பட வேண்டாம். என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்கிறேன் என்று கூறினேன்.எனது குர்மித்கல் தொகுதியிலும், சட்டவிரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. எனது பேச்சை போலீஸ் அதிகாரிகள், யாரும் கேட்பது இல்லை. இதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரின் போது, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதுவரை யார் மீதும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு இப்படி மெத்தனமாக செயல்பட்டால் யாருக்கும் பயம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி