மேலும் செய்திகள்
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
1 hour(s) ago
ராய்ச்சூர்: ''நாட்டின் பாதுகாப்புக்கும், கிராமங்களின் வளர்ச்சிக்கும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கும், தலித்கள், ஆதிவாசிகள் வளர்ச்சிக்கும் நரேந்திர மோடியின் நிர்வாகம் முக்கியம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தெரிவித்தார்.ராய்ச்சூர் பா.ஜ., வேட்பாளர் ராஜா அமரேஸ்வர் நாயக்கிற்கு ஆதரவாக, கட்சியின் தேசிய தலைவர் நட்டா பிரசாரம் செய்தார்.நேற்று காலை, கட்சி அலுவலகத்தில் இருந்து திறந்த வாகனத்தில் செல்லும்போது அவர் பேசியதாவது:மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டுமானால், பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டு அவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தேர்தல் மோடிக்கு முக்கியமானது.நாட்டின் பாதுகாப்புக்கும், கிராமங்களின் வளர்ச்சிக்கும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கும், தலித்கள், ஆதிவாசிகள் வளர்ச்சிக்கும் மோடியின் நிர்வாகம் முக்கியம்.அதுபோன்று சுர்பூரில் வளர்ச்சிப் பணிகள் நடக்க வேண்டுமானால், இத்தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராஜு கவுடாவுக்கு ஓட்டுப் போட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ராய்ச்சூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராஜா அமரேஸ்வர் நாயக்கிற்கும்; சுர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பா.ஜ., வேட்பாளர் ராஜு கவுடாவுக்கும் ஆதரவாக, கட்சியின் தேசிய தலைவர் நட்டா பிரசாரம் செய்தார். இடம்: ராய்ச்சூர்.
1 hour(s) ago