உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேநீர் விருந்தில் மோடி, ராகுல்: அளவளாவிய எம்.பி.க்கள்

தேநீர் விருந்தில் மோடி, ராகுல்: அளவளாவிய எம்.பி.க்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற தேநீர் விருந்தில் மோடி, ராகுல் பங்கேற்று அளவளாவிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. கடந்த ஜூலை 22ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் இன்று (ஆக.09) ஒத்தி வைத்தார் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா. இன்று பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற தேநீர் விருந்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். இதில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோரும் பங்கேற்றனர். இதன் படம் வெளியாகியுள்ளது. முன்னதாக விருந்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, ராகுல், மற்றும் எம்.பி.க்கள் ஒருவரையொருவர், வரவேற்றனர். இதில் பிரதமர் மோடி , ஓம்பிர்லா, அருகருகே அமர்ந்திருக்க மோடிக்கு வலதுபுறம் நாற்காலியில் ராகுல் அமர்ந்திருந்தார். ராகுல் அருகில் துரை வைகோ மற்றும் , ராகுல் அமர்ந்திருந்த வரிசையில் பா.ஜ.,வின் எல்.முருகன் அமர்ந்திருந்தார். அதே வரிசையில் அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, சிராக் பாஸ்வான், பியூஷ் கோயல் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுதிப் பந்தோபாத்யாய், கனிமொழி ஆகியோர் அமர்ந்திருந்தனர். எதிர்வரிசையில் அமித்ஷா, ராஜ்நாத் சிங் அமர்ந்திருந்தனர்.சில வாரங்களாக பார்லிமென்ட் கூட்டத்தொடரில் லோக்சபா விவாதத்தில் மோடி, ராகுலும் மோதிக்கொள்ள ராகுலின் பேச்சுக்கு அமித்ஷா ஆவேசபட என விவாதங்கள் அனல் பறந்தன இந் நிலையில் இன்று நடந்த தேநீர் விருந்தில் சர்வ கட்சி தலைவர்கள் அளவளாவிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வல்லரசு
ஆக 10, 2024 12:13

இதற்கு காரணம் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி


வல்லவன்
ஆக 10, 2024 12:01

இதற்கு காரணம் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி


வல்லவன்
ஆக 10, 2024 12:00

இதற்கு காரணம் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி


G.Jeyaprakash.
ஆக 10, 2024 06:52

மகிழ்ச்சியுடன் அளவளாவி ஏதாவது பிரச்சனையை தீர்த்தார்களா. தமிழ் நாட்டுக்கு வெள்ள நிவாரணம். வயநாடு பேரிடர் அறிவிக்க மகிழ்ச்சி யான சூழ்நிலையில் பேசி இருக்கலாம். எதிர்கட்சிகளை நாட்டு நலனுக்காக ஒத்துழைப்பு செய்ய பேசலாம்.


Anand Lawrence
ஆக 10, 2024 06:11

இது மக்கள் பிரச்சினை இல்லை.... அதான் வெளி நடப்பும் இல்லை....


naranam
ஆக 10, 2024 02:27

இதெல்லாம் ஒரு செய்தி...போங்கப்பா ! போய் உருப்புடியா எதாச்சும் பண்ணுங்க!


T.sthivinayagam
ஆக 09, 2024 21:58

ராமர் அளித்த தீர்ப்பு மக்கள் ராகுல் பக்கம்


Sathyanarayanan Sathyasekaren
ஆக 09, 2024 22:41

சுத்திவிநாயகம், உன்னைப்போன்ற ஹிந்துக்களளை நினைத்தாலே பற்றிக்கொண்டு வருகிறது. உன்னை போன்ற கழிசடைகள் தான் ராகுல் கான் போலி கண்டி என்ற ஊழல் பேர்வழிகள் பக்கம்.


hari
ஆக 10, 2024 08:38

ராமர் அளித்த தீர்ப்பே சிங்கள் டீ குடிக்க ராகுல் வந்தாரு சிவநாயகம்


R K Raman
ஆக 10, 2024 13:13

கணக்கு பாடத்தில் முட்டை வாங்கி ஆள் போல..


RAAJ68
ஆக 09, 2024 21:29

பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் நாட்டிற்கு நல்லது.


K.SANTHANAM
ஆக 09, 2024 21:26

இதுதான் நமது தேசிய கலாச்சாரம். இத்தகைய நிகழ்வை தமிழகத்துல எதிர் பார்க்க முடியாது. அது ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா காலத்தோடு முடிந்து விட்டன.


K.SANTHANAM
ஆக 09, 2024 21:26

இதுதான் நமது தேசிய கலாச்சாரம். இத்தகைய நிகழ்வை தமிழகத்துல எதிர் பார்க்க முடியாது. அது ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா காலத்தோடு முடிந்து விட்டன.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை