உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

மோடி பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் அன்று, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில், 4,000 பேருக்கு சைவ உணவு சமைத்து அன்னதானம் செய்ய இருப்பதாக தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.பாரசீக நாட்டு சூபி துறவியான குவாஜா மொய்னுதீன் சிஷ்டி, 1192 முதல் 1236ம் ஆண்டு வரையில் ராஜஸ்தானின் அஜ்மீரில் வசித்தார். அவரது மறைவுக்கு பின், அந்த இடத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு, அனைத்து மதத்தவரும் வந்து வழிபடுவது வழக்கம்.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாள் வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில், அஜ்மீர் தர்காவில் உள்ள, 'பிக் ஷாஹி தேக்' என்றழைக்கப்படும், உலகின் மிக பிரமாண்ட சமையல் பாத்திரத்தில் 4,000 பேருக்கு சைவ உணவு சமைத்து அன்னதானம் செய்ய உள்ளதாக, தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
செப் 13, 2024 05:42

உடன்பிறப்புக்களின் கதறல் புளூட்டோ வரை கூட கேட்கும் என்று எதிர்பார்க்கிறேன்.


சிவம்
செப் 12, 2024 22:10

பாகிஸ்தான் தீவிரவாதிகள் தலைவன் ஒருவன் இந்தியாவில் ரயில்கள் கவிழ நாசவேலை செய்யுங்கள் என்றும், எரிபொருள் கொண்டு செல்லும் பைப் லைனை சீர்குலையுங்கள் என்று சொன்னதை கேட்டு இங்கு சதி வேலையில் ஈடுபடுவோரை இஸ்லாமிய அமைப்புகள் தண்டிக்கட்டும் அல்லது அவர்களை இது போன்ற வேலைகளை செய்யாமல் தடுக்கட்டும். அதன் பிறகு அன்ன தானம் செய்யட்டும்.


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 12, 2024 21:48

100 கோடி பேருக்கு பியூஸ் புடுங்கிவிட்டு 4000 பேருக்கு அன்னதானம்


sankar
செப் 15, 2024 21:15

யாரு - ஸ்டிக்கர் கோஷ்டியா ?


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 21:34

உண்மையான இஸ்லாத்தில் தர்காவுக்கு இடமில்லை .......... ஆகவே இந்திய இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர்கள் போலிகள் என்று கூறுகிறார்கள் ........ அரபுகளுக்கும் இந்த உண்மை தெரியும் .........


கோபாலகிருஷ்ணன்
செப் 12, 2024 21:27

உப்பீஸ், சீட்டாஸ், தும்பீஸ் , உணடியலஸ் கதறல்கள் விண்ணை பிளக்கப்போகின்றன....!!!


Ramesh Sargam
செப் 12, 2024 21:08

அன்னதானத்தை விட பெரிய தானம் எதுவுமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை