உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு சிங்கவால் குரங்கு குட்டி வரவு

மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு சிங்கவால் குரங்கு குட்டி வரவு

மைசூரு: மைசூரு மிருகக்காட்சி சாலையில் சிங்கவால் குரங்கிற்கு பெண் குட்டி பிறந்துள்ளது.மைசூரு மிருகக்காட்சி சாலை செயல் இயக்குனர் மகேஷ் குமார் கூறியதாவது:நாட்டில் அழிந்து வரும் விலங்குகளை பாதுகாக்க, 2015ல் மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையத்தின் இன அபிவிருத்தி திட்டம் அமல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், அழிந்து வரும் விலங்குகளை மீட்டு, பாதுகாத்து, அதன் இனத்தை அதிகரிக்க செய்து, மீண்டும் வனத்தில் விடப்படும். இதற்காக மைசூரு, சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் வனவிலங்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இதுபோன்று மைசூரின் கூர்கள்ளியில் வனவிலங்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம், மிருகக்காட்சியில் அமைந்துள்ளது.மைசூரு மிருகக்காட்சி சாலையில், அழிந்து வரும் நிலையில் உள்ள சிங்கவால் குரங்கு பாதுகாக்கப்படுகிறது. இங்கு இரண்டு ஆண், ஒரு பெண் குரங்குகள் இருந்தன. இரண்டு மாதங்களுக்கு முன்பு, பெண் குரங்கிற்கு, பெண் குட்டி குரங்கு பிறந்தது. தற்போது இதன் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.இந்த குரங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகிறது. கன்னியாகுமரி, அகத்தியர் மலை, மாநிலத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷராவதி முதல் அகனாஷினி நதி பள்ளத்தாக்கு வரை இவற்றின் வாழ்விடமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ