மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
சிக்கபல்லாப்பூர் : சிக்கபல்லாப்பூர் எம்.பி., - எம்.எல்.ஏ.,வின் சொந்த ஊரில் உள்ள, அரசு சுகாதார மையத்தில், ஆறு மாதங்களாக டாக்டர் இல்லாத அவலம் நிலவுகிறது.சிக்கபல்லாப்பூர் அருகே உள்ள பெரேசந்திரா கிராமம். இந்த கிராமம், சிக்கபல்லாப்பூர் பா.ஜ., --- எம்.பி., சுதாகர், சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரின் சொந்த ஊர் ஆகும். இங்கு அரசு சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, டாக்டர்கள் பணியிட மாற்றம் நடந்த போது, பெரேசந்திரா சுகாதார மையத்தின் டாக்டரும், பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஆனால், அதன்பின் புதிய டாக்டரை, அரசு நியமிக்கவில்லை. இதனால் டாக்டர் இன்றி சுகாதார மையம் செயல்படுகிறது. அங்கு செல்லும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை நர்ஸ்கள் தான் கொடுக்கின்றனர். அவசர சிகிச்சை என்றால், சிக்கபல்லாப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு, பெரேசந்திரா மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். விரைவில் டாக்டரை நியமிக்க, எம்.பி., - எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
7 hour(s) ago | 2
13 hour(s) ago