உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் முதல் முயற்சி: ஜொல் விட வைக்கும் சிங்கப்பூர் தூதரின் பிரியாணி வீடியோ வைரல்

என் முதல் முயற்சி: ஜொல் விட வைக்கும் சிங்கப்பூர் தூதரின் பிரியாணி வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரியாணியின் சுவைக்கு அடிமையான இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் அதனை தானே தயாரித்து பிரியாணி பிரியர்களை ஜொல் விட வைக்கும் வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.பிரியாணிக்கு அடிமையானவர்கள் இந்தியர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ளனர். அதற்கு நாடு, இனம், மொழி என்ற பேதம் கிடையாது என்பது சிங்கப்பூர் தூததரின் வீடியோ மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z4gui7b1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 உலக பிரியாணி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்படும் பிரியாணி சுவை அலாதியானதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தயாரித்துள்ள பிரியாணி வீடியோ வைரலாகி வருகிறது.வீடியோவில் இது எனது முதல் முயற்சி என்ற முகவுரையுடன் துவங்கி பிரியாணிக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேர்மானம் குறித்து படிப்படியாக விவரிக்கும் வீடியோ பார்வையாளர்களை ஜொல் வடிய வைக்கிறது.ஹைலைட்டாக எந்த மாநிலத்தில் சிறந்த பிரியாணி உள்ளது என்பதை சொல்லுங்கள் நான் சுவைத்து பார்க்க வருகிறேன் என பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை