உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிநீர் திட்டங்களுக்கு நிதி வழங்கினால் நமஸ்காரம்

குடிநீர் திட்டங்களுக்கு நிதி வழங்கினால் நமஸ்காரம்

பெங்களூரு: ''பிரதமரிடம் பேசி முதலில் குடிநீர் திட்டங்களுக்கு நிதி வழங்கும்படி, பிரஹலாத் ஜோஷி செய்ய வேண்டும். அப்படி செய்தால், அவரது காலில் விழுந்து நமஸ்காரம் செய்வேன்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.''சிறையில் நடிகர் தர்ஷன் இருக்கும் படங்களை, அரசு தான் வெளியிட்டது'' என, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ஹுப்பள்ளியில் தெரிவித்தார்.இதற்கு பதிலடி கொடுத்து, துணை முதல்வர் சிவகுமார் பெங்களூரில் நேற்று கூறியதாவது:அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். எத்தினஹொலே குடிநீர்த் திட்டம், பத்ரா குடிநீர்த் திட்டம் குறித்து, விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அனைத்து கட்சி குழுவை அழைத்துச் சென்று வலியுறுத்தப்படும்.அப்போது, பிரதமரிடம் பேசி முதலில் குடிநீர்த் திட்டங்களுக்கு நிதியை வழங்கும்படி பிரஹலாத் ஜோஷி செய்ய வேண்டும். அப்படி செய்தால், அவரது காலில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன்.அனைத்துக் கட்சி குழுவை, எப்போது அழைத்துச் செல்லலாம் என்பது பற்றி, 15 நாட்களில் முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை