உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்கால பிரச்னையை தீர்க்க நானோ தொழில்நுட்பம்; விஞ்ஞானிகளுக்கு முதல்வர் அழைப்பு

எதிர்கால பிரச்னையை தீர்க்க நானோ தொழில்நுட்பம்; விஞ்ஞானிகளுக்கு முதல்வர் அழைப்பு

பெங்களூரு : ''அதிகரித்து வரும் நகரமயமாதல், மக்கள் தொகை பெருக்கம், மாறி வரும் வாழ்வியல் முறையால், எதிர்காலத்தில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், நானோ தொழில்நுட்பம் உருவாக்க வேண்டும்,'' என, விஞ்ஞானிகளுக்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார்.நானோ தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், '13வது பெங்களூரு இந்தியா நானோ மாநாடு - 2024' குமாரகிருபா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது. கர்நாடக அறிவியல், தொழில்நுட்ப துறை, கர்நாடக அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டு சங்கம், ஜவஹர்லால் நேரு மேம்பாட்டு அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து, ஏற்பாடு செய்துள்ளன.

கர்நாடகா முன்னிலை

நேற்று இம்மாநாட்டைத் துவக்கி வைத்து, முதல்வர் சித்தராமையா பேசியதாவது:நாட்டில் நடக்கும் மிக பெரிய நானோ மாநாடு இதுதான். பாரம்பரியம், கலாசாரத்துக்கு மட்டுமின்றி, கல்வி, ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களுக்கும் கர்நாடகா முன்மாதிரியாக திகழ்கிறது. புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், கர்நாடகா எப்போதுமே முன்னிலை வகிக்கிறது.இந்திய அறிவியல் கழகம், ஜவஹர்லால் நேரு மேம்பாட்டு அறிவியல் ஆராய்ச்சி மையம், தேசிய உயிரியல் அறிவியல் மையம், நானோ அறிவியல் தொழில்நுட்ப மையம் போன்ற ஆராய்ச்சி மையங்கள் பெங்களூரில் செயல்படுகின்றன.

பருவநிலை மாற்றம்

இவற்றின் மூலம், விரைவில் பெங்களூரு நானோ தொழில்நுட்ப மையமாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. பருவநிலை மாற்றம், குறைந்து வரும் எரிபொருட்கள், சுகாதார பிரச்னை, சுற்றுச்சூழல் நிர்வகிப்பு உட்பட பல பிரச்னைகளுக்கு, நானோ தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணலாம்.அதிகரித்து வரும் நகரமயமாதல், மக்கள் தொகை பெருக்கம், மாறி வரும் வாழ்வியல் முறையால், எதிர்காலத்தில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இவற்றுக்கு தீர்வு காணும் வகையில், நானோ தொழில்நுட்பம் உருவாக வேண்டும் என்று விஞ்ஞானிகளை கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், துணை முதல்வர் சிவகுமார், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் போசராஜு, பயோகான் நிறுவன செயல் தலைவர் கிரண் மஜும்தார் ஷா உட்பட ஏரளாமானோர் பங்கேற்றனர்.இன்று வரை நடக்கும் இம்மாநாட்டில், 700க்கும் அதிகமான பிரதிநிதிகள், 25க்கும் அதிகமான கருத்தரங்குகள், 75க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை