உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

மோடி தான் முழு பொறுப்பு!நாட்டின் இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருப்பதே, மத்திய பா.ஜ., அரசின் ஒரே நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில் கோடிகணக்கான இளைஞர்களின் கனவுகளை சிதைத்ததற்கு, மோடி அரசு தான் முழு பொறுப்பு. இது தான் உண்மை.மல்லிகார்ஜுன கார்கேகாங்., தேசிய தலைவர்ராகுலுக்கு ஆஸ்கர்!ஒரு புறம், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க போராடுவதாக ராகுல் கூறுகிறார். மறுபுறம், அவர் சார்ந்த காங்., அதை இழிவுபடுத்துகிறது. அரசியலமைப்பை பாதுகாப்பதில், ஆஸ்கர் விருது பெறும் அளவுக்கு ராகுல் நடிக்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.கே.டி.ராமா ராவ்செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதிசுயமரியாதைக்கான தேர்தல்!மஹாராஷ்டிராவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல், மாநிலத்தின் சுயமரியாதையை மீட்டெடுக்கவும், துரோகத்தை வீழ்த்துவதற்குமான போராக இருக்கும். இந்த தேர்தலில், துரோகிகள் வீழ்த்தப்படுவர். நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். உத்தவ் தாக்கரேதலைவர், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்