| ADDED : மே 22, 2024 01:19 AM
முக்கியமான தேர்தல்!இந்த அரசு விவசாயிகள், இளைஞர்கள், சிறு குறு தொழில்அதிபர்களுக்கு எதிராக, 10 ஆண்டுகளாக பாகுபாடு காட்டியது. இந்த தேர்தலில், 140 தொகுதிகள் பெறுவதற்கே பா.ஜ., சிரமப் பட வேண்டியிருக்கும்; இது அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் தேர்தல்.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதிஅமைதி பிடிக்காது!காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. இங்கு அதிக சுற்றுலா பயணியர் வருகின்றனர். அதனால் இங்குள்ள மக்கள் பயனடைகின்றனர். இது பிடிக்காமல், பாகிஸ்தான், பயங்கரவாதிகளை ஏவி விடுகிறது. பாக்., ஆட்சியாளர்கள், முதலில் தங்கள் நாட்டை கவனிக்க வேண்டும். குலாம் நபி ஆசாத்தலைவர், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சிஎப்படி உள்ளே வந்தார்?முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்குள் சுவாதி மாலிவால் அத்துமீறி நுழைந்ததாக ஆம் ஆத்மி கூறுகிறது. முதல்வர் அனுமதி தராமல் எப்படி அவர் வீட்டிற்குள் வந்தார். முதல்வரின் அனுமதியின்றி யாராவது வீட்டினுள் செல்ல முடியுமா?சுதன்ஷு திரிவேதிசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,